அச்சம் தவிர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சம் தவிர்
நூல் பெயர்:அச்சம் தவிர்
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:சொற்பொழிவு
துறை:தமிழ் இலக்கியம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:144
பதிப்பகர்:கற்பகம் புத்தகாலயம்,
4/2 சுந்தரம் தெரு
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2006
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

அச்சம் தவிர் என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். இப்பொழிவுகள், அச்சம் எப்படித் தோன்றியது என்பது தொடங்கி அதிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது வரை சி. சுப்பிரமணிய பாரதியாரின் நோக்கில் ஆய்வு செய்கின்றன.[1] பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும், இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான். அச்சமற்ற தன்மையே அமரத்வம் தருகிறது. அந்த அமரத்வம் பெற இதைப் படிப்பவர்களை தயார் செய்கிறது இந்நூல்.


உள்ளடக்கம்[தொகு]

  1. என்னுரை
  2. அச்சத்திற்கான அடிப்படைக் காரணம்
  3. பயமும் மருட்கையும்
  4. பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடலாமா?
  5. பேய்ப்பயம் – மனம்தான் காரணமா?
  6. அச்சத்தைப் போக்கும் ஆண்டவன் வழிபாடு
  7. அமரகவி பாரதி – அச்சமின்மையின் அடையாளம்
  8. மரணபயமா?
  9. வேதவாழ்வைக் கைப்பிடித்தால் வென்றுவிடலாம் அச்சத்தை!
  10. ஞானம் பெறுதலும் ஞானிகளின் அஞ்சாத இயல்பும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "அச்சம் தவிர்". hargeysamedia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சம்_தவிர்_(நூல்)&oldid=3812075" இலிருந்து மீள்விக்கப்பட்டது