மைதிலி சிவராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைதிலி சிவராமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-12-14)14 திசம்பர் 1939
காக்கிநாடா, சென்னை மாகாணம், இந்தியா
இறப்புமே 30, 2021(2021-05-30) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
முன்னாள் கல்லூரிசிரக்கியூஸ் பல்கலைக்கழகம்

மைதிலி சிவராமன் (Mythili Sivaraman, 14 திசம்பர் 1939 – 30 மே 2021) ஒரு இந்திய அரசியல்வாதியும் பெண் உரிமைச் செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)யின் பெண்கள் பிரிவான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மைதிலி சிவராமன் 1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். மேலும், தொழிற்சங்கவாதியாகவும் பெண் உரிமைச் செயல்பாட்டாளராகவும் நன்கறியப்பட்டார்.[2]

கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” (Haunted by Fire) என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன.[3] வாச்சாத்தி வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை நேர்கண்டு அதனைப் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிகழ்வு குறித்து இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டார்.[4]

இறுதி காலத்தில் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்[5]. அவரது மகள் கல்பனா கருணாகரன் சென்னை ஐஐடியில் துணைப் பேராசிரியராக உள்ளார்[6][7].

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • பெண்களும் மதசார்பின்மையும் (1993), சவுத் ஏசியன் புக்ஸ்[8]
  • பெண்ணுரிமை (1997), தமிழ் புத்தகாலயம்[8]
  • சமூகம் - ஒரு மறு பார்வைi (1998), தமிழ் புத்தகாலயம்[8]
  • ஆண் குழந்தை தான் வேண்டுமா (2005), தமிழ் புத்தகாலயம்[8]
  • கல்வித்துறையால், வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள், பாரதி புத்தகாலயம்[8]
  • ஒரு வாழ்க்கையின் துகள்கள்[9]
  • ஹாண்டட் பை ஃபயர் (2013), லெஃப்ட் வோர்ட் பப்ளிகேஷன்ஸ்

மறைவு[தொகு]

கொரோனா தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மே 30, 2021 அன்று உயிரிழந்தார்.[10] [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mythili Sivaraman - Boston Conference". Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.
  2. Research Assistant at United Nations
  3. Haunted by Fire, Release by, Left Word Pub, Bharathi Puthagalayam
  4. "representation in vachathi case". Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.
  5. "தி இந்து -- With fire in her belly". பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.
  6. "Memories of Amma". பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.
  7. "Tracing the lives of female ancestors". பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 Roja Muthaiah Research Library author page[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Some of her favourite things, Frontline magazine, February 25, 2006
  10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார். தினமணி நாளிதழ். 30 மே 2021. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/may/30/maithili-sivaraman-tncpim-senior-leader-has-passed-away-3632527.html. 
  11. மாதர் சங்க முதுபெரும் தலைவர் மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் காலமானார். தமிழ் இந்து நாளிதழ். 30 மே 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/676565-maithili-sivaraman-a-veteran-leader-of-aidwa-has-passed-away-due-to-corona-infection.html. 

வெளியிணைப்புகள்[தொகு]

  • ஓ! பக்கங்கள் (ஞாநியின் நேர்காணல்) -- [1]
  • Partners for Law in Development -- Uma Chakravarti on Mythily Sivaraman's life and politicisation - Ways of Seeing and Being [2]
  1. "ஞாநியின் நேர்காணல் ஓ பக்கங்கள்". பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.
  2. "Uma Chakravarti on Mythily Sivaraman's life and politicisation - Ways of Seeing and Being". பார்க்கப்பட்ட நாள் 30 மே 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_சிவராமன்&oldid=3568982" இலிருந்து மீள்விக்கப்பட்டது