திருவயிந்திபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவயிந்திபுரம்
திருவஹீந்திரபுரம்
Town
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர் மாவட்டம்
வட்டம் (தாலுகா)கடலூர் வட்டம்
வருவாய் கோட்டம்கடலூர்
மொழி
 • Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-31

திருவயிந்திபுரம் அல்லது திருவயிந்திரபும் என்பது இந்தியா தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1][2] இவ்வூர் திருவஹீந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் ‘திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன் அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

இவ்வூரில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Cuddalore taluk Map, Cuddalore, Tamil Nadu". Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of revenue villages in Cuddalore taluk, Tamil Nadu". Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 351. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவயிந்திபுரம்&oldid=3575397" இலிருந்து மீள்விக்கப்பட்டது