விக்கிப்பீடியா பேச்சு:உதவித்தொகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் உதவித் தொகை பெறும் வாய்ப்பு இருந்தால் கூடுதலாக பங்களிக்க இயலும் என்று நினைக்கிறீர்களா? எடுத்துக்காட்டுக்கு, சொந்தமாக ஒரு கணினி, திறன் குறைந்த பழைய கணினியை மாற்றி விட்டுப் புதிய கணினி, கட்டுரைகளுக்கான தகவலைச் சேர்ப்பது தொடர்பான செலவுகள் ( நூல் வாங்குதல் / நூலக அணுக்கம் / ஒளிப்பட கருவி வாங்குதல்), மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் மின்கலன் (inverter / UPS) வாங்குதல், மாணவராக இருந்தால் மாதாந்த இணைய அணுக்கச் செலவுகள். ஆம் எனில், உங்கள் தேவையைத் தெரிவிக்க முடியுமா? நேரடியாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து இதற்கான உதவியைப் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், பிற விக்கிமீடியா சார் அமைப்புகள் / தமிழார்வலர் கொடைகள் மூலம் இதனைச் செயற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கலாம். உண்மையிலேயே சிறப்பாக பங்களிக்கக்கூடியவருக்கு வளங்களுக்கான அணுக்கமின்மை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கிறேன். மாற்றுக் கருத்துகள் / அணுகுமுறைகளை வரவேற்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:37, 7 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் எப்படியல்லாம் (பழச) புதிது புதிதாய் யோசிக்கிறாங்கள். :) :D
 மிகவும் நல்ல திட்டம் ரவி அண்ணா !
👍 விருப்பம் நல்ல திட்டம். இதன் மூலம் தொடர்பங்களிபாளர்களைத் தக்கவைத்து ஊக்கப்படுத்துவதும் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் உதவும் அருமையான யோசனை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 8 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், எனக்கு மாதாந்திர இணையக் கட்டணம் 98 ரூ மட்டும் போதும். கல்லூரி நேரம் போக, விக்கிப்பீடியாவிலேயே தூங்கி எழுவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:58, 8 மே 2013 (UTC)[பதிலளி]
98 ரூபாயில் இன்டர்நெட்டா? எப்படி, தமிழ்?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:03, 8 மே 2013 (UTC)[பதிலளி]
கைபேசி சிம்மில் ஏர்செல் 98 ரூ இணையப் பொதியைச் செயற்படுத்தினால் மாதத்திற்கு 2 கிகாபைட்டுகள் இணைய அளவு கிடைக்கும். கைபேசியை புளுடூத் வசதியினால் மடிக்கணினியுடன் இணைப்பேன். கணினியில் இணைய வசதி செயற்படும். இணைய வேகம் குறைந்தால், படங்களையும், ஜாவாஸ்கிரிப்டையும் முடக்கி வைப்பேன். அவ்வளவே. -10:30, 8 மே 2013 (UTC)
👍 விருப்பம் தொடர்ந்து பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்கள் கூடுதலாக பங்களிக்க தடையாக இருப்பது அதிகரித்துள்ள மின் கட்டணம், மின்வெட்டு மற்றும் இணைய இணைப்பில் தடங்கல்.
கூடுதல் திறன் உள்ள மடிக்கணினி, இணக்கி மற்றும் ஒளிப்பட கருவி விக்கிப்பீடியர்களுக்கு சலுகை கட்டணத்தில் கிடைக்க வகை செய்யலாம்--ஸ்ரீதர் (பேச்சு) 12:49, 8 மே 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மின்வெட்டு காரணமாக பங்களிப்பு குறைகிறது என்று ஒரு சில பங்களிப்பாளர்கள் கூறியதே இப்படி ஒரு முயற்சியைச் செய்வோமா என்று எண்ணத்தூண்டியது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் சில நண்பர்கள் சேர்ந்து இன்னொரு தமிழார்வமுள்ள நண்பருக்குக் கணினி வாங்கித் தந்த பிறகு அவரது தமிழ் சார்ந்த செயற்பாடுகள் கூடியதும் இன்னொரு உந்துதல். மற்றவர்களின் கருத்துக்கும் பொறுத்திருந்து, ஒரு வாரம் கழித்து இதனை முறையான ஒரு திட்டமாக அறிவிக்கலாம். பொத்தாம் பொதுவான சலுகையாக இல்லாமல் தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட பயனர் ஒருவர் வேண்டுகோள் வைத்த பிறகு அதனை ஆய்வு செய்து செயற்படுத்துவதே சரியாக இருக்கும். இந்தக் கால இடைவெளியில் விக்கிப்பீடியா சார் அமைப்புகள் மூலம் இதற்கு நிதியுதவி பெற வழி உள்ளதா என்று அறிந்து விட்டுச் சொல்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:50, 9 மே 2013 (UTC)[பதிலளி]

இவ்வாறு கருவிகள் / தொகை கொடை அளிப்பதில் தெளிவான முற்காட்டுகள் இல்லாததால், முன்கூட்டியே நிதி ஆதாரம் பெறுவது குறித்து உறுதியான வழியொன்றை கண்டடைய முடியவில்லை. எனினும், இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முறையான ஒரு திட்டமாக அறிவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். வரும் வேண்டுகோள்களைப் பொருத்து, அவற்றை எப்படி நிறைவேற்றித் தரலாம் என்பதைச் சிந்திக்கலாம். --இரவி (பேச்சு) 18:43, 29 மே 2013 (UTC)[பதிலளி]
நல்ல முன்னெடுப்பு. --Natkeeran (பேச்சு) 00:48, 30 மே 2013 (UTC)[பதிலளி]
நல்ல யோசனை. தனிப்பட்ட வகையில் இவ் உதவியை செய்யாமல். கிராமப் புறப் பள்ளிக்கூடங்களுக்கு (இணைய இணைப்பு பெறமுடியாத) மற்றும் கிராம மட்ட நிறுவனங்களுக்கு இணைய இணைப்பு பெற உதவ முடியுமாயின் அதன் வழி பலர் பயன்பெற முடியும். விக்கிபற்றிய தொடர்பு நிலையமாகவும் பரப்புரைக்கான மையமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:53, 30 மே 2013 (UTC)[பதிலளி]