வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகு  

புவியியலாளர்கள்

பயன்பாடு

புவியியலாளர்கள் துனைப் பக்கத்தின் வடிவமைப்பு வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/வடிவமைப்பு.

Selected articles list

வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/1

எவரஸ்ட்
ஜார்ஜ் எவரஸ்ட் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.



வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/2

மத்தியகால ஓவியர் ஒருவர் வரைந்த தொலெமியின் படம்
தொலெமி (கி.பி 90 - 168) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெமாயெஸ், ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். ரோமரின் கீழிருந்த எகிப்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும். தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய அறிவியல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய அல்மாகெஸ்ட் (Almagest) என்பதாகும். அடுத்தது, ஜியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, கிரேக்கர்களும், ரோமர்களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். நான்கு நூல்கள் என்ற பொருள் தரும் டெட்ராபிப்லோஸ் என்பதே நூலின் பெயர்.



வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/3

பியெரி பெர்தியர்
பியெரி பெர்தியர் ( Pierre Berthier: ஜூலை 3, 1782- ஆகஸ்ட் 24, 1861) பிரான்சு நாட்டுப் புவியியலாளர் மற்றும் சுரங்கப்பொறியாளர். பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள லெஸ்-பாக்ஸ்-டி-புரொவென்சி எனும் கிராமத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது அங்கு கிடைக்கப்பெற்ற ஒரு கனிமத்தைக் கண்டறிந்து, அதற்கு அவ்வூரின் பெயரான பாக்சைட் (Bauxite) பெயரிட்டார். இதிலுள்ள உலோகம் அலுமினியம் எனக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுத்தார். மேலும் இவர் பெர்தியரைட் என இவர் பெயரால் அழைக்கப்படும் கனிமத்தையும் கண்டறிந்தார். பெர்தியர் பிரான்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெர்தியருக்கு வழங்கப்பட்டது



வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/4

பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்
பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும், பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார். இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின் நகரில் கல்வி கற்றார். 1860ஆம் ஆண்டில், யூலென்பர்க் பயணம் எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும் இடையில், இலங்கை, ஜப்பான், தாய்வான், செலெபெஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், சீயாம், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும் இடையில், ஐக்கிய அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை சீனா, ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.



வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/5

குவாரிஸ்மியின் 1200 ஆவது பிறந்த நாளின்போது 1983 செப்டெம்பர் 6 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல்தலை.
முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொ.ஆ 780ல் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும் அக்காலத்தில் குவாரிசும் என்று அழக்கப்பட்டதுமான இடத்தில் பிறந்தார். இவ்விடம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. கிபி 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட இயற்கணிதம் என்பதே ஒருபடிச் சமன்பாடு, இருபடிச் சமன்பாடு என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும். பலர் இவரை இயற்கணிதத்தின் தந்தை என்கின்றனர். எண்கணிதம் என்னும் இவரது நூலின் இலத்தீன் மொழிபெயர்ப்பு 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. இந்திய எண்கள் பற்றி விளக்கிய இந்த நூல் பதின்ம இட எண்முறையை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியது. தொலெமியின், புவியியல் என்னும் நூலைத் திருத்தி இற்றைப்படுத்திய இவர் வானியல், சோதிடம் ஆகியவை தொடர்பிலும் நூல்களை எழுதியுள்ளார்.



வலைவாசல்:புவியியல்/புவியியலாளர்கள்/6

எச். என். ரிட்லி
சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது. 1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.



முன்மொழிதல்

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.