பேச்சு:மரபணுப் பிறழ்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபணுப் பிறழ்ச்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையை மரபணு கோளாறு கட்டுரையுடன் இணைக்க பரிந்துரைத்துள்ளேன். அத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் வைக்க வேண்டிய தலைப்பு மரபியல் கோளாறு / மரபியல் கோளாறுகள் என்று வருவது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது. இதுபற்றி கலந்துரையாட வேண்டுகின்றேன்.--கலை 13:23, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை. பரம்பரையாக அல்லது மரபணு வழியாக கடத்தப்படும் நோய்கள் வேறாகவும் மரபணுவிலேற்படும் கோளாறுகள் வேறாகவும் பார்க்கப்படவேண்டும். இரண்டும் ஒன்றல்ல அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் 23:15, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மரபியல் கோளாறு (genetic disorder) என்பதையும், மரபியல் நோய் (genetic disease) எப்படி சரியாக பிரித்தறியலாம் என்பதில் எனக்கு குழப்பமாக உள்ளது. மரபியல் கோளாறு கட்டுரையை விரிவாக்க முனைந்தால், அது மரபியல் நோய்க் கட்டுரையிலும் சேர்க்கப்படக் கூடியதாகத் தோன்றுகின்றது. அதனால்தான் அக் கட்டுரைகளை இணைக்கப் பரிந்துரைத்தேன். இதுபற்றி எனக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகின்றது. அல்லது இரண்டுக்கும் பொதுவான ஒரு தலைப்பைத் தெரிவு செய்து, ஒரே கட்டுரையாக எழுத முடியுமா?--கலை 12:36, 2 பெப்ரவரி 2012 (UTC)

disease, disorder இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை, இவை இரண்டுமே ஒன்று என்றும் கூடக் குறிப்பிடலாம், எனினும் தருணத்தைப் பொறுத்து இவற்றின் பயன்பாடு வேறுபடுகின்றது.

disease என்பது உடலில் ஏற்படும் இயல்பு மீறிய நிகழ்வு, இது குறிப்பிட்ட உணர் / அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இதற்குரிய காரணி பெரும்பாலும் புறக்காரணியாக இருக்கும், உடலின் தொழிற்பாடு இங்கு பாதிக்கப்பட்டு இருக்கும். சுருங்கக்கூறின் இது ஒரு பொதுவான சொல். disorder என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது செயற்பாட்டில் அல்லது குறிப்பிட்ட தொகுதியில் ஏற்படும் இயல்பு மீறிய பிறழ்வைக் (மாறுபாட்டை/ குழறுபடியை) குறிக்கின்றது. விரிவாக நோக்கின் diseaseக்குள்தான் disorder அடங்குகின்றது எனக் கருதவேண்டியுள்ளது. disorder பெரும்பாலும் உளக் குறைபாடு, பிறப்புக் குறைபாடு, மரபணுப் பாதிப்பைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.

  • எடுத்துக்காட்டு:

புற்றுநோய் ஒரு disease ஆனால் தூக்கமின்மை ஒரு disorder.

மாரடைப்பு (இதயத்தசை இறப்பு) ஒரு நோய், சில அடைப்பிதழ் நோய்கள் பிறழ்வு (அல்லது பிறழ்ச்சி) ஆகும்.

ஆனால் பொதுவாக மரபணு சம்பந்தமான நோய்களைப் பிறழ்வு என்று அழைப்பதே உகந்தது. பொருத்தமான சொற்தேர்வு “மரபணுப் பிறழ்ச்சி”. மரபணுக் கோளாறு என்பது பொருத்தமல்ல. கோளாறு என்பது சமிபாட்டுக் கோளாறு (indigestion) போன்றவற்றிற்கு பொருத்தமாக அமையலாம். எனவே Genetic disease, genetic disorder இரண்டையுமே பொதுவாக மரபணுப் பிறழ்ச்சி என நான் கருதுகிறேன். ஆங்கில விக்கியில் கூட இவ்வாறே en:genetic disorder என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 20:01, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில், பரம்பரை நோய் (Inherited Disease or Hereditary Disease), மரபணு நோய் (Genetic disease) ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுக்கத் தேடியபோது, அவை மூன்று கட்டுரைகளுமே, Genetic Disorder (மரபணுப் பிறழ்ச்சி) பக்கத்திற்கு வழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், மேலுள்ள உரையாடலும் அதனையே குறிப்பதனால், தேடலில் கிடைப்பதற்காய், அந்தத் தலைப்புகளை வைத்துக்கொண்டு, இக் கட்டுரைக்கு வழிமாற்றுச் செய்திருக்கிறேன்.--கலை (பேச்சு) 22:52, 5 மார்ச் 2021 (UTC)