சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்தித்தாள்[தொகு]

தமிழ் முரசு, சிங்கப்பூரின் ஒரே தமிழ் தினசரி செய்தித்தாளாகும். இது முதன் முதலில் 1935 ஆம் ஆண்டு தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் வெளியிடப்பட்டது. சிங்கையில் வெளியாகும் 16 நாளிதழ்களுள் ஒரே தமிழ் நாளிதழாகும்.

வானொலி[தொகு]

ஒலி 96.8 அலை வரிசை 96.8FM (Oli 96.8FM) மீடியா கார்ப் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரே தமிழ் வானொலியாகும். சிங்கை வாழ் தமிழர்களை மிகவும் கவர்ந்த ஒரு அலைவரிசையாக இது இடம் பிடித்துள்ளது. செய்தி, பாடல்கள் மற்றுமின்றி கல்வி சார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் இது சிறப்பாக வழங்கி வருகிறது.

தொலைக்காட்சி[தொகு]

வசந்தம், மீடியா கார்ப் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரே தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது தமிழர்களை மட்டுமின்றி மற்ற இந்தியர்களையும் கவரும் பொருட்டு வார இறுதியில் மற்ற இந்திய மொழிகளான இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிப் படங்களையும் ஒளிபரப்புகிறது.