விக்கிப்பீடியா:பயிற்சி/அருஞ்சொற்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பு:இது தமிழ் விக்கிப்பீடியாவில் கூடுதலாக பாவிக்கும் சொற்களின் சுருக்கமான பட்டியல். விகிப்பீடியாவின் முழுமையான அருஞ்சொற்பட்டியலுக்கு இங்கு செல்லவும்.


கட்டுரை
ஓர் கலைக்களஞ்சிய ஆக்கம். அனைத்து விக்கிப்பீடியா கட்டுரைகளும் பக்கங்கள், ஆனால் அனைத்து விக்கி பக்கங்களும் கட்டுரைகள் அல்ல.
தடைபட்ட தொடுப்பு அல்லது இல்லாத தொடுப்பு
விக்கியில் இல்லாத பக்கத்திற்கான உள்இணைப்பு. இவை சிவப்பு வண்ணத்தில் தோற்றமளிக்கும். உங்களுக்கு இந்த தலைப்பு பற்றி தெரியுமானால், அதனை பகிர விரும்பினால், இந்த தொடுப்பை சொடுக்கி கட்டுரை எழுதத் தொடங்குங்கள்.
பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
ஓர் சொல் குறித்த பல்வேறு பக்கங்களைப் பட்டியலிடும் பக்கம்.
தொகுத்தல் முட்டல்
இரண்டு அல்லது கூடுதல் தொகுப்பாளர்கள் ஒரே பக்கத்தினை தொகுக்க முற்படுவது. பார்க்க: en:Wikipedia:edit conflicts.
GFDL
குனூ தளையறு ஆவண உரிமம். விக்கிப்பீடியா ஆக்கங்கள் இந்த காப்புரிமையின் கீழ் வெளியிடப்படுகின்றன.
கூகுள் சோதனை
கூகுள் அல்லது பிற தேடல் பொறிகள் மூலம் கட்டுரை தலைப்புகளையும் பத்தி தலைப்புகளையும் தேடல். முக்கியமாக நான்கு காரணங்களுக்காக பாவிக்கப்படுகிறது: 1.காப்புரிமை குறித்த சரிபார்த்தல்,2.எந்த உச்சரிப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது, 3.ஓர் கட்டுரை எழுதும் அளவு அறியப்பட்டவராக இருக்கிறாரா, 4.எழுதப்படும் பொருள் உண்மையானதா ?
ஆலமரத்தடி
விக்கிப்பீடியா:ஆலமரத்தடியின் சுருக்கம் - இங்கு விக்கிப்பீடியாவின் வளர்ச்சி,கட்டுரைகளின் தரம் ஆகியன உரையாடப்படுகின்றன.
மீள் வழிப்படுத்துதல்
கொடுக்கப்பட்ட பக்கத் தலைப்பை மற்றொரு பக்கத்திற்கு வழிப்படுத்துதல். இது ஒரே பொருளுள்ள இரு சொற்கள் அல்லது எளிதான தொடுப்பினுக்காக பயன்படுத்தப்படுகிறது. பார்க்க விக்கிப்பீடியா:மீள் வழிப்படுத்துதல்.
விக்கிமயமாக்கல்
விக்கிப்பீடியா உள் இணைப்பு மூலம் செழுமை பெறுவது உண்மை . அதனை அளவிற்கு அதிகமாக செய்தல்.

மீண்டும் பயிற்சிப் பக்கங்களுக்குத் திரும்ப, உங்கள் உலாவியின் பின்னே பொத்தானை சொடுக்கவும்.