வலைவாசல்:மின்னணுவியல்/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.

இலத்திரனியல் (electronics) அல்லது மின்னணுவியல் என்பது மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். இலத்திரனியல் இரண்டு முக்கிய தொழிற்பாடுகளை ஏதுவாக்கிறது. முதலாவதாக மின்சக்தியை உற்பத்தி செய்ய, conversion செய்ய, வழங்க, பயன்படுத்த இலத்திரனியல் பயன்படுகிறது. இரண்டாவதாக தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்களை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.