ஜோசப் கொன்ராட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் கொன்ராட்
பிறப்புஜோசஃப் தியடோர் கொன்ராட் கொர்செனியோவ்ஸ்கி
(1857-12-03)3 திசம்பர் 1857
பெர்டிசிவ், உக்ரைன்
இறப்பு3 ஆகத்து 1924(1924-08-03) (அகவை 66)
பிஷப்ஸ்பூர்ன், இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர்
காலம்1895–1923
இலக்கிய இயக்கம்உளவியல் யதார்த்தவாதம்; நவீனத்துவம்

ஜோசப் கொன்ராட் அல்லது ஜோசஃப் கான்ராட் (Joseph Conrad, டிசம்பர் 3, 1857 – ஆகஸ்ட் 3, 1924) ஒரு ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில் ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார்.

தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அவருடையப் படைப்புகள் கடல், கப்பல் வாழ்க்கை ஆகியவற்றையே பெரும்பாலும் களமாகக் கொண்டுள்ளன. கடமையுணர்வும், விசுவாசமும் மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் இவருடைய புதினங்களிலும், சிறுகதைகளிலும் கருபொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டானியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கொன்ராடின் படைப்புகள், அதன் தொலைதூரப் பிரதேசங்களை ஆளும் அதிகாரிகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. கொன்ராடின் உரைநடைத் திறன் புகழ்பெற்றது. ஆங்கில இலக்கிய உலகு அதுவரை கண்டிராத சோக யதார்த்தவாதச் சூழலை ஆங்கிலப் புதினப் படைப்புச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியவர் கொன்ராட். அவருடைய கதை சொல்லும் பாணியும், எதிர் நாயக கதை மாந்தரும் பல பிற்கால எழுத்தாளர்களுக்கு தாக்கங்களாக அமைந்துள்ளன. கொன்ராடின் படைப்புகள் உலகெங்கும் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன; அவை பல திரைப்படங்களின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • விக்டரி
  • லார்ட் ஜிம்
  • ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்
  • தி சிக்ரெட் ஏஜண்ட்
  • என் அவுட்காஸ்ட் ஆஃப் தி ஐலாண்ட்ஸ்
  • தி ரோவர்
  • தி ஷாடோ லைன்
  • தி டூயல்
  • நோஸ்டிரோமோ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_கொன்ராட்&oldid=3459620" இலிருந்து மீள்விக்கப்பட்டது