குரம்பை வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரம்பை வீடு என்பது கூரை வீடு ஆகும். வீடுகளின் மேற்கூரைகள் பல்வேறு பொருட்களினால் வேயப்பட்டிருக்கும். இவ்வீடுகள் ஏழை, எளியவர்கள் வாழும் வீடுகளாக இருக்கும். பண்டைய தமிழகத்தில் ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்த நிலங்களில் கிடைக்கும் குரம்பைகளுக்கேற்ப வீடுகளின் கூரைகளை வேய்ந்தார்கள்[1] குரம்பை வீடுகளைப் பற்றிய விரிவுகளைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் வெளிப்படுத்துகின்றார்.

பாலை நிலம்[தொகு]

பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஈந்துக் குரம்பையில் வாழ்ந்தனர். ஈந்தின் இலை முள் போன்று இருக்கும். எனவே கூரையில் அணிலும் எலியும் ஓடாமல் இருக்க ஈந்துக் குரம்பை வீடுகள் பயன்பட்டன.

மருத நிலம்[தொகு]

மருத நிலத்தில் நெல் மிகுதியாக விளையும். எனவே நெல்லின் வைக்கோல் கொண்டு வேயப்பட்ட நெல்குரம்பை வீடுகள் மருத நிலத்தில் மிகுதியாகக் காணப்பட்டன.

நெய்தல் நிலம்[தொகு]

நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல் (நாணல்) அதிகம் விளைந்தது. நெய்தல் நில வலைஞர்கள் கொம்புகளை இடையில் நிறுத்தித் தாழை நாரால் அதனை இறுகக் கட்டினர். அதன் மீது தருப்பைப் புல் வேய்ந்த குரம்பை உருவாக்கினர்.

ஏனையவை[தொகு]

தென்னந்தோப்புகளில் வாழ்ந்த மக்கள் தென்னை ஓலைகளைப் பாய் போல் பின்னி, தெங்குமடல் குரம்பையை ஏற்படுத்திக் கொண்டனர்.

தற்காலத்தில் பனை ஓலைகளால் வேயப்பட்ட பனைக்குரம்பை வீடுகளும் உண்டு.

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள். பக்கம் 18 .(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரம்பை_வீடு&oldid=2163382" இலிருந்து மீள்விக்கப்பட்டது