வேயா மாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேயா மாடம் என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. இம்மாடங்களில் திறந்த நிலை மேல் தளமாகிய நிலாமுற்றமே வேயா மாடம் எனப்பட்டது. முழுநிலவுக் காலத்தில் நிலவின்பம் துய்க்க இம்மாடங்கள் பயன்பட்டன.[1]

'நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்'[2]

என சிலம்பும் நெடுநல்வாடையும் சுட்டுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள் பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)
  2. நெடுநல்வாடை. வரிகள்:95, சிலப்பதிகாரம். வரி 4:31
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேயா_மாடம்&oldid=1407448" இலிருந்து மீள்விக்கப்பட்டது