ஆர்பிஜி குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்பிஜி என்டர்பிரைசசு
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமும்பை, இந்தியா (1979)
நிறுவனர்(கள்)ஆர். பி. கோயங்கா[1]
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்
தொழில்துறைபல்துறை குழுமம்
உற்பத்திகள்
வருமானம்15,000 கோடி ரூ.(2012)[2]
இணையத்தளம்www.rpggroup.com

ஆர்பிஜி குழுமம் (RPG Group) இந்தியாவின் மிகப்பெரும் பல்துறைத் தொழில் குழுமங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.[3] 1979ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆர். பி. கோயங்கா நிறுவினார்.[4] துவக்கத்தில் இக்குழுமத்தில் பிலிப்சு கார்பன் பிளாக், ஏசியன் கேபிள்சு, அகர்பரா சணல், மர்பி இந்தியா ஆகிய நிறுவனங்களே இருந்தன. மற்ற நிறுவனங்களை கையகப்படுத்துவதில் வல்லவரான ஆர்.பி.கோயங்கா, இசுபென்சர்சு, சியட் வட்டகை போன்ற நிறுவனங்களை வாங்கினார். 2013இல் தமது மரணம் வரையிலும் ஆர்.பி.கோயங்கா இதன் கௌரவ தலைவராக விளங்கினார். இவரது மறைவிற்கு பிறகு இவரது மகன் ஹர்ஷ் கோயங்கா தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.[5]

இன்றளவில் ஆர்பிஜி குழுமத்தில் பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் அடங்கியுள்ளன.[6] சியட் வட்டகை, தகவல் தொழினுட்ப நிறுவனமான சென்சர் டெக்னாலஜிசு, உள்கட்டமைப்பு நிறுவனமான கேஇசி இண்டர்நேஷனல், மருந்து நிறுவனமான ஆர்பிஜி லைஃப் சயின்சசு ஆகியன இக்குழுமத்தில் இம் பெற்றுள்ள சில நிறுவனங்களாகும். 2012 நிதியாண்டில் இக்குழுமத்தின் மொத்த வருமானம் ரூ 16,000[7]கோடியாக இருந்தது.

வரலாறு[தொகு]

1920இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் வணிகம் புரிவதற்காக இராச்சசுத்தானில் ஒரு சிற்றூரைச் சேர்ந்த இராம்தத் கோயங்கா கொல்கத்தாவில் இதனை நிறுவினார். 1950இல் கோயங்கா இரு பிரித்தானிய நிறுவனங்களான டன்கன் பிரதர்சு மற்றும் ஆக்டவியசு எஃகு நிறுவனங்களை வாங்கினார்.

அவரது மறைவிற்கு பிறகு ஏற்பட்ட பிரிவினை உடன்பாட்டை ஒட்டி அவரது மகன் இராம பிரசாத் கோயங்கா ஆர்பிஜி என்டர்பிரைசசு என்ற நிறுவனத்தை 1979இல் நிறுவினார். அப்போது பிலிப்சு கார்பன் பிளாக், ஏசியன் கேபிள்சு, அகர்பரா ஜூட் மற்றும் மர்பி இந்தியா ஆகிய நிறுவனங்கள் இருந்தன. இந்திய வணிகத்துறையின் கையகப்படுத்தும் மன்னர் என்ற அடைமொழி பெற்ற ஆர்.பி.ஜி பல நிறுவனங்களை தொடர்ந்து கையகப்பட்டுத்தி தமது குழுமத்தை விரிவுபடுத்தினார்.


1980களில் ஆர்பிஜியினால் கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்:

  • சியட் வட்டகை இந்தியா (1981)
  • கேஈசி (1982)
  • சியர்லே இந்தியா, தற்போது ஆர்பிஜி லைஃப் சயின்சசு (1983)
  • டன்லப் (1984)
  • கிராம்போன் கம்பனி ஆஃப் இந்தியா, தற்போது சரெகம இந்தியா (1986)
  • சிஈஎஸ்சி (1989)
  • ஆரிசன்சு மலயாளம் (1989)
  • இசுபென்சர் & கோ. (1989)
  • ஐசிஐஎம் (1989)

இக்குழுமத்தின் ஒரு கிளையாக ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமம் 2010இல் உருவானது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RPG Group Turnover To Get A Boost From Power, Tyre". Financialexpress.com. 2002-07-24. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
  2. "Overview". Archived from the original on 2015-06-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  3. "RPG Group to spend Rs 160 crore on expansion of specialty retail business | TopNews". Topnews.in. 2010-05-07. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
  4. "RPG Enterprises: Private Company Information - BusinessWeek". Investing.businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
  5. "RPG Group Corporate Website, History Section". Archived from the original on 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  7. [www.news.com]
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-29. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்பிஜி_குழுமம்&oldid=3542892" இலிருந்து மீள்விக்கப்பட்டது