கதிர்வீச்சளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர்வீச்சளவு (radiation exposure) என்பது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எக்சு மற்றும் காமாக் கதிர்களின் அளவாகும். இன்று பெருமளவில் மருத்துவத்துறையில் நோயினைக் காணவும், குணப்படுத்தவும் எக்சு மற்றும் காமாக் கதிர்கள் பயன்படுகின்றன. ஓர் இலக்கு அல்லது ஒரு மூலத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் ஒரு புள்ளியை அடைந்து பின் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஒரு புள்ளியை அடையும் கதிரின் அளவு கதிர்வீச்சளவு எனப்படுகிறது. இது பழைய அலகு முறையில் இராண்டஜன் அலகிலும் இப்போதைய SI அலகிலும் அக்கதிர்கள் தோற்றுவிக்கும் அயனிகளின் இயக்க ஆற்றல் அடிப்படையிலும் அளவிடப்படுகின்றன. (கெர்மா-KERMA) இந்த அலகிற்கு எந்த பெயரும் இல்லை. கதிர் வீச்சிலிருந்து உடல் அல்லது பிறபொருட்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கதிர்வீச்சின் ஆற்றல் கதிர் ஏற்பளவு எனப்படும்.

இன்று பல கதிர் ஐசோடோப்புகள் அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன் படுத்தப்படுகின்றன.அதுபோல் அணுக்கரு மருத்துவத்திலும் பயன்படுகின்றன.ஒரு கதிர்கருவிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் எட்டு மணிநேரத்தில்-இது பணி நேரம்- வந்தடையும் கதிர்வீச்சளவு

        Ex = 4.4 *E*C R

.

என்று கணிக்கப்பட்டுளது.இங்கு

R என்பது இராண்சனிலும்
E என்பதுஆற்றல்-MeV.டிலும்
C என்பது எத்தனைக் கியூரி கதிர் கரு உள்ளதென்பதனையும் குறிக்கிறது.

எடுத்துக்காட்டிற்காக,குரோமியம் 51 ஐ எடுத்துக்கொள்வோம்.குரோமியம் வெளிப்படுத்தும் கதிர்களின் ஆற்றல் E =0.323 MeV.நாம் எடுத்துக் கொண்ட குரோமியத்தின் அளவு 10 மில்லிக் கியூரி என்றும் கொண்டால்,

 EX =4.4*0.323*0.01 (மில்லிக் கியூரி , கியூரியாக மாற்றப்பட்டுள்ளது).இப்போது,
Ex =0.014212 R
     =14.2 mR ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்வீச்சளவு&oldid=2745778" இலிருந்து மீள்விக்கப்பட்டது