பெரிய திருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய திருமொழி
திருமாலின் மச்ச அவதாரம், இந்த இலக்கியத்தில் போற்றப்பட்டுள்ளார்.
தகவல்கள்
சமயம்இந்து சமயம்
நூலாசிரியர்திருமங்கையாழ்வார்
மொழிதமிழ்
காலம்9th–10th century CE
வரிகள்1,084

திருமங்கையாழ்வார் இயற்றியது பெரிய திருமொழி. திருமால் மீது பாடப்பட்ட நூல் ஆகும். இது பத்து பாகங்களாகவும், ஒவ்வொரு பாகத்திலும் 10 பாடல்களும் உள்ளமையால் மொத்தம் 1084 பாடல்கள் உள்ளது.[1] பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் விளக்க நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் 108 வைணவ திருத்தலங்களில் உள்ள பெருமாள்களைப் பற்றி அதிகமாக பாடல்கள் உள்ளது. சில திருத்தலங்களுக்கு 1 பாடல்கள் முதல் 100 பாடல்கள் வரை பாடப்பட்டுள்ளது

நாலாயிர திவ்ய பிரபந்தத்திரட்டில் பங்கு[தொகு]

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இரண்டாவது ஆயிரமாக இடம்பெற்றுள்ளன. இதில் 1084 பாடல்கள் உண்டு.

உள்ளடக்கம்[தொகு]

திருமங்கை ஆழ்வாரின் மனைவி குமுதவல்லியால் திருமங்கையாழ்வார் வைணவத்திற்கு திரும்பியதாக வைணவம் கூறுகிறது. இவர் நம்பிக்கை படி அன்னதானம் செய்வதற்கு திருடத் தொடங்கினார் என்றும் ஒருமுறை, திருமண கோஷ்டியிடம் திருட முடிவு செய்தார், ஆனால் மணமகனும் மணமகளும் திருமாலும் திருமகளும் என்பது அவருக்கு தெரியாது. மணமகளின் மெட்டியை எடுக்க முயற்சி செய்தபோது தோல்விய தழுவினார், பின்பு அவரது வாயால் அந்த மெட்டியை முயற்சி செய்தார், உடனடியாக தெய்வீகத் தன்மையை உணர்ந்தார் மேலும் திருமந்திரத்தை (ஓம் நமோ நாராயணா) கற்றபிறகு, திருமாலைப் போற்றி பெரிய திருமொழி இயற்றினார்.

இவரது மனைவி குமுதவல்லியால் வைணவத்திற்கு திரும்பினார் என்று வைணவம் கூறுகிறது.

சில பாடல்கள்[தொகு]

நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்

தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால்

அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்

மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே.
திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 11: 4: 11

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வைணவ இலக்கியம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_திருமொழி&oldid=3796882" இலிருந்து மீள்விக்கப்பட்டது