சுகாசன மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
சுகாசன மூர்த்தி
சுகாசன மூர்த்தி - தஞ்சைக் கலைக்கூடம்
சுகாசன மூர்த்தி - தஞ்சைக் கலைக்கூடம்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சுகாசன மூர்த்தி என்பது சிவ வடிவங்களில் ஒன்றாகும்.இது உமாதேவியாருக்கு சிவபெருமான் சிவாகமங்களின் பொருளினை விளக்கிய திருவுருவம் ஆகும்.[சான்று தேவை] இது சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும்.

சொல்லிலக்கணம்[தொகு]

சுகாசனம் என்பது சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்றாகும்.[சான்று தேவை]

வேறு பெயர்கள்[தொகு]

நல்லிருக்கை நாதர்


தோற்றம்[தொகு]

சுகாசனர் வடிவத்தில் இடக்காலை மடக்கிவைத்து, வலக்காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.

வகைகள்[தொகு]

  • உமாசகித சுகாசனர்
  • உமா மகேசுவர சுகாசனர்
  • சோமாஸ்கந்த சுகாசனர்

உருவக் காரணம்[தொகு]

சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும்.


கோயில்கள்[தொகு]

  • சுவேதாரண்யேசுவர் கோயில் திருவெண்காடு,திட்டக்குடி சிவாலயத்திலும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாசன_மூர்த்தி&oldid=3595588" இலிருந்து மீள்விக்கப்பட்டது