சாற்றுப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தொல் பழங்குடியினரான காணிக்காரர்கள் அவர்களின் தெய்வவழிபாட்டின் போது பாடப்படும் பாடல் சாற்றுப்பாட்டு. காணிக்காரர்களின் குலதெய்வ வழிபாட்டின் போது பூசாரியாலும் தெய்வஅருள் வந்தவராலும் இந்த சாற்றுப்பாட்டு பாடப்படுகிறது. இந்தப் பாட்டு தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் பாடப்படுகிறது. இந்த பாட்டுப் பாடும்போது பக்க இசையாக கொக்கறை என்ற இசைக் கருவியும் இசைக்கப்படுகிறது. இந்த இசைக்கருவி காணிக்காரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாற்றுப்பாட்டு&oldid=3074047" இலிருந்து மீள்விக்கப்பட்டது