பண்டைய நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்திலும், இடைக்காலத்திலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட நாட்டை முறையே சேரநாடு, சோழநாடு [1], பாண்டியநாடு என வழங்கினர். இவை ஆளும் மன்னர்களால் பெயர் பெற்ற நாட்டுப் பெயர்கள். சேரர், சோழர், பாண்டியர் என்னும் பெயர்களும் முறையே சேர்ப்பு நாட்டு மக்கள், (சோறு)சோற்றுவளம் மிக்க நாட்டு மக்கள், பண்டைய மக்கள் எனக் குடிமக்கள் பெயர்களாகக் கொண்டு குடிமக்களால் பெயர்பெற்ற நாட்டுப் பெயர்கள் எனக் கொள்ளினும் அமையும்.

ஓய்மானாடு [2] கொங்கு நாடு [3], வள்ளுவப்பாடி நாடு [4], ஆகியவை குடிமக்களால் பெற்ற நாட்டின் பெயர்கள்.

தொண்டை நாடு [5], வேங்கடநாடு [6] முதலானவை நிலவியலால் பெயர் பெற்ற நாட்டுப் பெயர்கள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்
    • ஓவியர் குடிமக்களின் தலைவன் ஓய்மான். ஓவியர் பெருமகனை ஓய்மான் என்றது மரூஉ-மொழி.
    • மான் என்னும் பின்னொட்டு பெருமகன் ஒருவனைக் குறிக்கும். அதியமான், தொண்டைமான், மலையமான், சேரமான், வெளிமான் முதலான பெயர்கள் இவ்வாறு அமைந்தவை.
    • சோணாடு என்னும் சொல்லில் சோழன் என்னும் சொல் 'சோள் > சோண்' என மருவியது போல, ஓவியர் என்னும் சொல் 'ஓய்' என மருவிற்று.
  2. கொங்கர் குடிமக்கள் வாழ்ந்த நாடு கொங்கு நாடு
  3. வள்ளுவர் எனப்படும் கணிய-மக்கள் வாழ்ந்த நாடு
  4. ஆதொண்டை என்னும் கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த நாடு
  5. கடம் என்னும் சொல் யானையின் மதத்தைக் குறிக்கும். வேம் கடம் என்னும்போது வேகும் கடத்தைக் குறிக்கும். யானைக்குக் காம வேட்கை மிகும்போது மதம் பிடிக்கும். மதம் ஒழுகும். மதம் கடமாக ஒழுகும். இத்தகைய யானைகளை மிகுதியாக உடைய நாடு வேங்கட நாடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_நாடுகள்&oldid=1791446" இலிருந்து மீள்விக்கப்பட்டது