தூங்கலோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஞ்சிப்பாவிற்கான ஓசை தூங்கலோசை. தூங்கல் என்னும் சொல் தொங்குதலைக் குறிக்கும். [1] தொங்கும் ஊஞ்சலில் ஆடுவது போலத் தூங்கும்-ஓசையைத் தூங்கலோசை என்றனர். இது கலித்தளை கொண்டு நடக்கும் துள்ளலோசைக்கு எதிரான ஓசை.

தூங்கலோசை மூன்று வகைப்படும்:

௧. ஏந்திசைத் தூங்கலோசை

ஏந்திசைத்தூங்கலோசை எனப்படுவது ஒன்றிய வஞ்சித்தளைகளை (கனி முன் நிரை) மட்டும் கொண்டிருக்கும்.

௨. அகவல் தூங்கலோசை

அகவல் தூங்கலோசை எனப்படுவது ஒன்றாத வஞ்சித்தளைகளை (கனி முன் நேர்) மட்டும் கொண்டிருக்கும்.

௩. பிரிந்திசைத் தூங்கலோசை

பிரிந்திசைத்தூங்கலோசை எனப்படுவது பல தளைகளும் கலந்து வரக்கூடியது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப (புறநானூறு 225)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்கலோசை&oldid=1483936" இலிருந்து மீள்விக்கப்பட்டது