தாமஸ் பாரி (சென்னை வணிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் பாரி

தாமஸ் பாரி (Thomas Parry, 1768 - 1824) ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட வேல்சு நாட்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் எட்வர்டு பாரி மற்றும் அன்னே வாகன் தம்பதியின் மூன்றாவது மகனாவார். பிரித்தானிய இந்தியாவில் இருக்கும் வணிக வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு 1780-களில் இவர் சென்னைக்கு வந்தார்[1]. 1788ஆம் ஆண்டு ஜூலை 17இல் நூல் மற்றும் துணிமணிகள் விற்கும் வியாபாரத்துடன் வங்கி போல பணம் கொடுத்து வாங்கும் தொழிலை சாதாரணமாக தொடங்கினார். அவருடைய இந்த தொழில் நன்கு வளர்ச்சியடைந்து பாரி என்கிற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது. இப்பொழுதும் சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை (தற்போதைய சென்னையின் என்எஸ்சி போஸ் சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் இடம்) இவருடைய பெயரை அடிப்படையாக வைத்தே Parry's corner என வழங்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Parry of Parry's Corner". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பாரிமுனை - பழைய சென்னையும் அதன் சுற்றுப்புறமும்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 23, 2013.