சிவப்பிரகாசக் கருத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்பிரகாசக் கருத்து என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சைவ ஆசாரியரால் எழுதப்பட்டது. இது 64 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆன நூல். இதில் சிவப்பிரகாசப் பாடல்களுக்கு அடி வரவும், அதிகார அடைவும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியை மதுரைச் சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பு:

இப்படி உமாபதி தேவன் உரைத்த
மெய்ப்படு சிவப்பிர காச விருத்தக்
கருத்தினது உண்மை விரித்துரைத் தருளினன்
சண்பையில் வாழும் தவகுரு நாதன்
பண்புஅமர் சிற்றம் பலவன் தானே

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பிரகாசக்_கருத்து&oldid=1355874" இலிருந்து மீள்விக்கப்பட்டது