திருப்பி அழை (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரலாக்கத்தில், திருப்பி அழை (call-back) என்பது செயலிக்கு உள்ளீடு காரணியாக அனுப்பப்படும் செயலி அல்லது இயக்கக் கூடிய நிரல் துண்டு. இதனை அச்செயலி தனக்கு வேண்டிய நேரத்தில் இயக்கலாம். வெளியே உள்ள அல்லது வரையறை செய்யப்பட்ட ஒன்றை அனுப்பி இயக்கச் சொல்வதால் இதனை திருப்பி அழை (call back) என்று கூறுவர். இவை வரைகலை பயனர் இடைமுகத்தில், ஏசாக்சு சூழ்நிலைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.