அரிந்தம் சௌத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிந்தம் சௌத்திரி
தேசியம்இந்தியர்
கல்விதிட்டமிடல் மற்றும் தொழில்முனைவில் பட்டமேற் பட்டயம்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்
பணிபொருளியல், மேலாண்மை எழுத்தாளர்
பெற்றோர்மலாய் சௌத்திரி
வாழ்க்கைத்
துணை
இரசிதா சௌத்திரி
வலைத்தளம்
arindamchaudhuri.com

அரிந்தம் சௌத்திரி (Arindam Chaudhuri வங்காள மொழி: অরিন্দম চৌধুরি) ஓர் இந்திய பொருளியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் அமைந்துள்ள ஐஐபிஎம் திங்க் டாங்க்கின் இயக்குநரும் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராக மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தை 1973இல் நிறுவிய மலயேந்திர கிசோர் சௌத்திரியின்[2] மகனாவார்[3]. இவர் தமது பட்டமேற்படிப்பு பட்டயத்தை இதே கழகத்தில் 1992ஆம் ஆண்டில் பெற்றார்.[4] பின்னர் இக்கழகத்தின் பொருளியல் ஆய்வு மற்றும் மேம்பட்ட கல்வி மையத்தின் கௌரவ தலைவராக பொறுப்பேற்றார்[5]. 2004ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக் குழுவில் சமூக மற்றும் வேளாண்மைத்துறை கலந்தாய்வுக் குழுவில் பணியாற்றினார்.[6] சமூகத்துறை அமைப்பான பிளான்மான் கன்சல்டிங் மற்றும் கிரேட் இந்தியன் டிரீம் பவுண்டேசனை நிறுவினார்.[7][8] i1 சூப்பர் சீரீஸ் தானுந்து விளையாட்டில் தில்லிக்கான உரிமத்தின் உரிமையாளர் ஆவார்.[9]

சர்ச்சைகள்[தொகு]

சித்தார்த்த தேப் எழுதிய தி கிரேட் கேட்ஸ்பி: எ ரிச் மேன் இன் இந்தியா என்ற நூலில் அரிந்தம் சௌத்திரி குறித்து எழுதியிருந்தார்; இதிலிருந்து சில பகுதிகளை பெப்ரவரி 2011இல் கேரவன் ஆங்கில இதழ் வெளியிட்டுருந்தது. இப்பகுதி தமக்கு மிகுந்த துன்புறுத்தலையும் மனப்புண்ணையும் ஏற்படுத்தியிருப்பதாக கேரவன் இதழ், சித்தார்த்த தேப், மற்றும் பதிப்பகம் பென்குயின் புக்சு மீது அரிந்தம் தொடுத்த வழக்கின் தொடர்பாக இப்பகுதிகள் நீக்கப்பட்டன.[10][11] பெப்ரவரி 15, 2013 இல் இந்திய திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தை விமரிசனம் செய்த 73 உரலிகளை (சமச்சீர் வளக் குறிப்பான்கள்) நீதிமன்ற வழக்கு ஒன்றின் மூலம் தடை செய்தார். தடை செய்யப்பட்டவற்றில் இக்கழக்கத்தை குறித்த வழிகாட்டுதல்களைக் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் பக்கம், செய்தித்தாள்களில் வந்த செய்திகள், நுகர்வோர்நல மன்றங்கள், அங்கத வலைப்பதிவுகள் என்பனவும் இணைய செய்தி வலைத்தளங்களும் அடக்கமாக இருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.[12]

திரைப்படத் தயாரிப்பு[தொகு]

அரிந்தம் தயாரித்த முதல் திரைப்படம் ரோக் சகோ தோ ரோக் லோ (தடுக்க முடிந்தால் தடு).[13] இவரது நிறுவனமான பிளான்மேன் மோசன் பிக்சர்சு வங்காளமொழித் திரைப்படம் சாஞ்ச்பாதிர் ரூப்கதாரா (2002),[14] தோசார் (2006)[15] மற்றும் தேசியத் திரைப்பட விருது பெற்ற ஃபால்த்து (2006)[16][17] ஆகியவற்றைத் தயாரித்தது. தொடர்ந்து மித்தியா (2008) என்ற இந்தித் திரைப்படத்தை தயாரித்தது.[18] மற்றொரு திரைப்படமான தி லாஸ்ட் லியர் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படமாக 2009இல் தேசிய விருது வென்றது.[19]

எழுத்தாக்கங்கள்[தொகு]

அரிந்தம் சௌத்திரி ஐந்து நூல்களை எழுதியுள்ளார்:

  • டிஸ்கவர் தி டயமண்டு இன் யூ (உங்களிலுள்ள வைரத்தைக் கண்டறிக)[20]
  • கவுன்ட் தி சிக்கன்சு பிபோர் தே ஹேட்ச் (முட்டை பொறிவதற்கு முன்னரே கோழிகளை எண்ணுங்கள்)
  • தி கிரேட் இந்தியன் டிரீம்: ரெஸ்டோரிங் பிரைடு டு எநேசன் பிட்ரேய்டு (இந்தியப் பெருங்கனவு: ஏமாற்றப்பட்ட நாட்டிற்கு பெருமையை மீட்க)[21]
  • தார்ன்ஸ் டு காம்பெடீசன் (போட்டிக்கு தடைக்கற்கள்)[22]
  • கல்ட்: லீடர்சிப் அண்ட் பிசினசு ஸ்ட்ரடஜி (வழிமுறை: தலைமையும் வணிக யுக்தியும்)

சான்றுகோள்கள்[தொகு]

  1. PIB press release, Government of India, September 9, 2011
  2. IIPM history, retrieved on July 4, 2012
  3. Editorial பரணிடப்பட்டது 2015-09-29 at the வந்தவழி இயந்திரம், The Sunday Indian, retrieved on July 4, 2012
  4. "What's Shah Rukh doing in B-school?". The Times of India. 8 June 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Whats-Shah-Rukh-doing-in-B-school/articleshow/4627706.cms. 
  5. Ajoy Ashirwad Mahaprashasta (25 April 2009). "Managing the nation (Interview with Arindam Chaudhuri)". Frontline (magazine) 26 (9). http://www.hindu.com/fline/fl2609/stories/20090508260910800.htm. 
  6. "Straight answers". Times of India. 13 September 2004. http://timesofindia.indiatimes.com/articleshow/849622.cms. 
  7. Planman Consulting- Jobs & Careers with us in HR, IT & Telecom, IT Enabled Services, BPO, Call Center, Finance, Analytics And Risk Management, Financial Services, Software Eng...
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  9. "Chaudhuri named i1's Delhi franchise owner - Times Of India". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. "IIPM sues Caravan, Google, Penguin for Rs 50 cr". IBN Live. June 23, 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110625055922/http://ibnlive.in.com/news/iipm-sues-caravan-google-penguin-for-rs-50-cr/162032-3.html. பார்த்த நாள்: 19 February 2012. 
  11. Agencies (June 23, 2011). "IIPM sues mag for Rs 50 crore". Ahmedabad Mirror இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130116213040/http://www.ahmedabadmirror.com/printarticle.aspx?page=comments&action=add&sectid=4&contentid=201106232011062302511364706aa19a&subsite=. பார்த்த நாள்: 20 February 2012. 
  12. http://www.business-standard.com/article/management/iipm-dares-to-take-on-the-regulators-113022300309_1.html
  13. "Rok sako to rok lo". The Hindu (Chennai, India). 8 March 2004 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040705143337/http://www.hindu.com/mp/2004/03/08/stories/2004030800450100.htm. 
  14. "Setting his sights on Hollywood". The Times of India. 21 August 2002. http://timesofindia.indiatimes.com/articleshow/19797364.cms. 
  15. "Taking Indian ideas to the West". The Hindu (Chennai, India). 5 October 2005 இம் மூலத்தில் இருந்து 23 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060523010031/http://www.hindu.com/2005/10/05/stories/2005100519730200.htm. 
  16. "Best Film in Family Welfare". Archived from the original on 2008-06-20. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.
  17. ‘Faltu’ to be released on February 17, The Tribune, Chandigarh.
  18. "The debutante". The Hindu (Chennai, India). 23 November 2006 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070911160916/http://www.hindu.com/thehindu/mp/2006/11/23/stories/2006112301250200.htm. 
  19. "Pro Kerala image reference, retrieved on 29 September 2010". Archived from the original on 15 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  20. Times of India photo gallery reference
  21. Connemara Public Library பரணிடப்பட்டது 2015-10-01 at the வந்தவழி இயந்திரம், Government archives
  22. "THORNS TO COMPETITION Official Book Website". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிந்தம்_சௌத்திரி&oldid=3682987" இலிருந்து மீள்விக்கப்பட்டது