மகர னகர மயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[ம்] எழுத்தில் முடியும் சொல் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் [ன்] எழுத்தாக மாறும்.

எடுத்துக்காட்டு

  • அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து [1]
  • அறன் அழீஇ அல்லவை செய்தல் [2]
  • அறன் வரையான் (வரையான் என்னும் சொல்லிலுள்ள [வ] அரையுயிர்) [3]

தமிழில் இப்படி மயங்காத அஃறிணைச் சொற்கள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. [4] இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.

உயர்திணைப் பெயர்கள் இவ்வாறு மாறுவதிலை.

கந்தன் என்னும் சொல்லைக் கந்தம் என எழுதுவதில்லை.

1.உகின் [5], 2.செகின் [6], 3.விழன் [7], 4.பயின் [8], 5.அழன் [9], 6.புழன் [10], 7.குயின் [11], 8.கடான் [12], 9.வயான் [13] ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு எகின் [14] என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருக்குறள் 130
  2. திருக்குறள் 182
  3. திருக்குறள் 150
  4. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
    னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
    புகர் அறக் கிளந்த அஃறிணை மேன (தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 82, மொழிமரபு)
  5. இது மருவி நகத்தைக் குறிக்கும் 'உகிர்' என்னும் சொல்லாகியுள்ளது
  6. இதன் மரூஉமொழி காளையின் செகிலை(திமிலை)க் குறிக்கிறது
  7. விழல் என்னும் நாணல் தட்டை. இதனைப் பேய்க்கரும்பு எனவும் கூறுவர்
  8. அரக்குப் பிசின் "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்" (அகநானூறு 1)
  9. அழல் என்னும் பிணம் எரியும் தீ
  10. உள்துளை கொண்ட பொருள் (புழை)
  11. குயின்றமைத்த பாறை வீடுகள்
  12. யானை மதத்தைக் குறிக்கும் 'கடாம்' என்னும் சொல்லின் மயக்கம் இது அன்று. கடைநிலையை உணர்த்தும் சொல்
  13. கருவுற்றிருக்கும் காலத்தில் மகளிர் விரும்பும் மண் தின்னும் ஆசை
  14. புளியமரம்
    எகின்-மரம் ஆயின் ஆண்-மர இயற்றே. (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 337)
    கரடி
    ஏனை எகினே அகரம் வருமே;
    வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 338)
  15. மகர இறுதி அஃறிணைப் பெயரின்
    னகரமோடு உறழா நடப்பன உளவே (நன்னூல் 122)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர_னகர_மயக்கம்&oldid=1334449" இலிருந்து மீள்விக்கப்பட்டது