தன்மேம்பாட்டுரை அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவன் தன்னைத் தானே மேம்படுத்தி (புகழ்ந்து) உரைப்பது தன்மேம்பாட்டுரை அணி ஆகும்[1][2].

தன்மேம்பாட்டுரை அணியின் இலக்கணம்[தொகு]

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் தன்மேம்பாட்டுரை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

நூற்பா

     தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.
                          --(தண்டியலங்காரம், 71)

(எ.கா.)

     எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு
     அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
     பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில்
     சாராஎன் கையில் சரம்.
                          --(தண்டியலங்கார மேற்கோள்)

பாடலின்பொருள்:
வீரன் ஒருவன் தன் ஆற்றலையும் வீரப்பண்பையும் வெளிப்படுத்தி உரைக்கிறான்.

போரில் எனக்கெதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பியோர் எவருமில்லை; ஆகவே எனக்கு அஞ்சியவர்கள் அச்சமில்லாமல் திரும்பிப் போய்விடலாம். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிரப் புறங்காட்டிச் செல்வோர் முதுகுகளில் பாயமாட்டா.

இப்பாடலில் தன்னைத்தானே வீரன் புகழ்ந்து கொள்வது வெளிப்படுகிறது.

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்மேம்பாட்டுரை_அணி&oldid=3215124" இலிருந்து மீள்விக்கப்பட்டது