விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கேயோ பின்வரும் வசனத்தை விக்கியின் நிர்வாகி ஒருவர் வாயிலாக கேட்டதாக நினைவு. அது யாதெனில் "விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்துநிறைய பேர் எழுத்தாளர்கலாக மாறியிருக்கிறார்கள்." அந்த எழுத்தாளர்கள் தமிழ் தொடர்பானவர்கள் என்றால் அவ்ர்களின் பட்டியலை இட்டு நீங்களும் விக்கியை தொகுப்பதன் மூலம் எழுத்தாளராக ஆகலாம் என்று தள அறிவிப்பு இட்டால் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:21, 2 பெப்ரவரி 2013 (UTC)

மேற்கண்ட கூற்றை யார் என்ன சூழலில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆயினும், ஒருவர் எழுத்தாளராக மாறுவதற்குப் பல்வேறு காரணிகள் உண்டு என்பதால், விக்கிப்பீடியாவின் காரணமாக ஒருவர் எழுத்தாளர் ஆனார் எனச் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை. அப்படி யாராவது வெளிப்படையாகச் சொன்னால் பார்க்கலாம் :) ஆனால், நீங்கள் இன்னொரு முக்கியமான கருத்தைத் தொட்டிருக்கிறீர்கள். விக்கிப்பீடியாவைத் தொகுப்பதால் எனக்கு என்ன கிடைக்கிறது? என்பது பலரின் மனதில் தோன்றக்கூடிய கேள்வி. இதற்கான பதிலை நாம் அனைவரும் சிந்தித்து வரிசைப்படுத்தினோமானால், அதனை முன்னிறுத்தித் தூண்டல்கள் இடலாம். எடுத்துக்காட்டுக்கு,
  • நல்ல நட்புகள்
  • ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக கழிப்பது
  • எழுத்துத் திறனை வளர்த்துக் கொள்வது
  • தங்கள் படிமங்களுக்குப் பரந்த காட்சிப்படுத்தும் வாய்ப்பு கிடைப்பது

..என்று இப்படி பல பயன்களைச் சொல்லலாம்.--இரவி (பேச்சு) 18:27, 2 பெப்ரவரி 2013 (UTC)

நான் குறிப்பிட்டதோ இன்னொருவர் குறிப்பிட்டதோ தமிழ் விக்கியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த விக்கிகளையும் சேர்த்துச் சொன்னதாக ஞாபகம். உங்களுக்கு தெரிந்து யாரேனும் விக்கி வந்த பிறகு எழுத்தாளர் ஆகியுள்ளனரா? என்னை பொறுத்தவரை வரலாற்று கட்டுரைகளுக்கு எல்லாம் முறைப்படி மேற்கோள் வழங்குதலை எல்லாம் இங்கு தான் கற்றுக்கொண்டேன். விக்கிக்கு வருவதற்கு முன் கட்டுரை எழுத எல்லாம் தெரியாது. நூலகம் சென்று படிப்பதோடு சரி. ஆய்வுக்கட்டுரை எல்லாம் அனுப்ப அழைப்பு வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:47, 4 பெப்ரவரி 2013 (UTC)

:) 👍 விருப்பம்

இற்றை[தொகு]

திட்டத்தின் இலக்கை அடைய இன்னும் 6 மாதங்களே உள்ளன. கடந்த 18 மாதங்களில் சனவரி 2014இல் மட்டும் ஆகக் கூடுதலாக ஒரே மாதத்தில் 34 பேர் பங்களித்துள்ளனர். இது நமது இலக்கில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் 100 தொகுப்புகளைச் செய்யக்கூடிய மொத்தம் 89 பங்களிப்பாளர்களை இது வரை இனங்கண்டுள்ளோம் என்பது நல்ல செய்தி. சனவரி 2015 என்னும் ஒரே மாதத்திலாவது 100 பேரை 100 தொகுப்புகள் செய்ய வைப்பதை இலக்காக கொள்வோம். அதன் பிறகு அந்த ஈடுபாட்டைத் தக்க வைக்க முனைவோம். இதற்கான பல்வேறு முயற்சிகளை அடுத்து வரும் ஆறு மாதங்களில் செய்வது சிறப்பாக இருக்கும். உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:22, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

எதிர்மறைக் கருத்துக்களை எதிர்கொள்ளல்[தொகு]

எதிர்மறைக் கருத்துக்களை எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு விக்கிபீடியாவின் மூலமாகக் கிடைத்துள்ளது. விக்கியில் எழுத ஆரம்பித்தபோது எதிர்மறை கருத்துக்கள் எழும்போது எழுதாமல் இருந்துவிடலாமா என யோசித்தேன். மறுமொழி, விவாதம் எனத் தொடங்கி தடம் மாறிவிடுவோமோ என்ற ஐயமும் இருந்தது. அவ்வப்போது என் ஐயங்களை நான் கேட்கக் கேட்க நண்பர்கள் அதனைத் தெளிவுபடுத்தும்போது ஈடுபாடு ஏற்பட்டது. வார்ப்புரு அமைத்தல், தலைப்பு, உட்தலைப்பு இடுதல், மேற்கொள் சுட்டல் என்று ஒவ்வொன்றாகத் தெரிய ஆரம்பித்தபின் ஓரளவு எழுதமுடிகிறது. உங்கள் பெயர் வெளியே தெரியாமல் இருக்கும்போது அனாவசியமாக ஏன் எழுதுகின்றீர்கள் என நண்பர்கள் கேட்பதுண்டு. நாம் படித்ததை, பார்த்ததை மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்னை விக்கியின் பக்கம் இழுத்தது. பல ஆண்டுகளுக்கு என் ஆய்வு தொடர்பாக சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஒரு தலைப்பினை ஆரம்பித்தேன். சில நாள்களில் ஏதோ காரணங்கள் சுட்டப்பட்டு அது நீக்கப்பட்டது. நாளடைவில் விதிகளை ஓரளவு அறிந்துகொண்டு எழுத ஆரம்பித்து, தொடர்கிறேன். அலுவலகப்பணி, களப்பணி என்ற நிலைகளில் பணிப்பளு அதிகம் உள்ள நிலையில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விக்கியில் இல்லாத தலைப்பை குறித்து வைத்துக்கொள்வேன். புகைப்படங்களைப் பதிவதில் இன்னும் சில புரிதல்கள் இல்லை. அவற்றையும் விரைவில் அறிவேன். ஆரம்பத்தில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்த நான், எனது இரு வலைப்பூக்கள் மூலமாக எழுதும் முறையில் சில மாற்றங்களை அமைத்துக்கொண்டேன். தற்போது அது எனக்கு விக்கியின் எழுத உதவுகிறது. நான் தற்போது தொடர்ந்து எழுதத் துணையாக இருப்பது விக்கியில் நண்பர்கள் எனக்கு அளிக்கும் ஊக்கம் மட்டுமே. கும்பகோணம் கோயில்கள், தமிழர் பண்பாடு, மகாமகம் குறித்த மேலதிகச் செய்திகள், மற்றும் இதுவரை வெளிவராத தலைப்புகள் என்ற நிலைகளில் எனக்குத் தெரிந்தவரை எழுதி வருகிறேன். எனக்குத் துணை நிற்கும் விக்கிபீடிய நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுவேன் உங்கள் அனைவரின் துணையுடன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:58, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]