க. பொ. இளம்வழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. பொ. இளம்வழுதி (ஜனவரி 6, 1936 - மார்ச் 5, 2013)[1] என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரியிலுள்ள கலிதீர்த்தாள் குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தந்தை வெ. பொன்னுச்சாமி, தாய் தனபாக்கியம். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிவப்பு நிலா, குறுநூறு, சிவப்புச் சிந்தனைகள் உள்ளிட்ட 11 கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் வெளியிட்டவர். இவர் எழுதிய "விளையாட்டுகள் அன்றும் இன்றும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இலக்கியப் படைப்புக்கள்[2][தொகு]

  1. சிவப்பு நிலா (தமிழக அரசின் பரிசு பெற்றது) காவியம்
  2. நந்திவர்மன் காதலி
  3. வேர்கள் (புதுவை அரசின் பரிசு பெற்றது) கவிதை-நிகழ்வுகள்
  4. ஆண்டவன் அறுபது
  5. நிறங்கள்
  6. குறுநூறு கவிதைத் தொகுப்பு
  7. சிவப்புச் சிந்தனைகள் (தமிழக அரசின் பரிசு)
  8. வண்ணத்தமிழ்
  9. சில்லுகள்
  10. வாக்கு மூலம்
  11. வெடித்து முளைத்த விதைகள்
  12. தளிர்
  13. வெண்பூக்கள் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு)
  14. நாளங்கள் (கரூர் இலக்கிய அறக்கட்டளைப் பரிசு)
  15. வெற்றியின் அறிமுகம் (நேரு) உரைநடை-வரலாறு
  16. இலக்கை நோக்கி (மண்டேலா)
  17. வைகரைப் புள் (கவிஞர் வாணிதாசன்)
  18. கார்ககில் கதை (கார்க்கில் போர்)
  19. போராட்டப் பூமி (வியட்நாம்-ஹோசிமின்)
  20. நம்முடன் நல்லவர் (நல்லகண்ணு)
  21. ஆரங்கள் (உடல் நலன்) உரைநடை
  22. இலக்கிய அறிமுகம் (இலக்கியம்)
  23. தமிழைத்தேடி (மொ.ழி)
  24. விளையாட்டுக்கள்-அன்றும் இன்றும் (தமிழக அரசின் பரிசு பெற்றது)
  25. மரபும் திரிபும் (இலக்கிய ஆய்வு)

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பொ._இளம்வழுதி&oldid=3614093" இலிருந்து மீள்விக்கப்பட்டது