ப. முத்துக்குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. முத்துக்குமாரசுவாமி (மார்ச் 11, 1936 - அக்டோபர் 29, 2020) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளரும், தமிழறிஞருமாவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை எனும் ஊரில் பிறந்தவர். தந்தை மு. பஞ்சநாதம், தாய் மாரியம்மாள். தருமபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை (புலவர்) இடைநிலைப் பட்டம் பெற்றவர். இலக்கியவளம், திருவாசகத்தேன், மெய்ப்பாட்டியல் உள்ளிட்ட 43 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "செந்தமிழ் முருகன்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._முத்துக்குமாரசுவாமி&oldid=3915488" இலிருந்து மீள்விக்கப்பட்டது