வரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரம்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புஎஸ். குமார்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபிரபு
அமலா
உசிலைமணி
ரவிச்சந்திரன்
வி. கோபாலகிருஷ்ணன்
ஸ்ரீவித்யா
பானுமதி
ஜெயஸ்ரீ
வாணி
கிருஷ்ணாராவ்
ஒய். ஜி. மகேந்திரன்
எம். ஆர். ஆர். ரகு
விவேக்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வரம் (Varam) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். சி. சக்தி இயக்கினார். பிரபு, அமலா, ஜெயஸ்ரீ, ரவிசந்திரன் மற்றும் ஸ்ரீவித்யா போன்றோர் நடித்து 1989 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.

எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, எஸ். குமார் மற்றும் வி. ராமகிருஷ்ணா என்பவரால் தயாரிக்கப்பட்டது. மக்கள் இயக்குனர் ஆர். சி. சக்தியினால் திரைக்கதை வசனம் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டது. அதிக அளவில் எதிர்மறையான விமர்சனங்களால் படம் வெற்றியைப் பெறவில்லை.

படத்தின் கரு, வரமிருந்து பெற்ற பிள்ளையை செல்லம் கொடுத்து வளர்ப்பதால், ஈரமற்று வளரும் அப்பிள்ளை பிழையான பாதையில் பயணிப்பதை, எதிர்க்கும் தாயே அவனை கொன்று தடுக்கும் கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரம்_(திரைப்படம்)&oldid=3732806" இலிருந்து மீள்விக்கப்பட்டது