ஆ. சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. சந்திரசேகரன் (A chandrashekhar) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் 25 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கல்லூரியின் துணை முதல்வர், முதல்வர் பொறுப்புகளையும் வகித்திருக்கிறார். தமிழக நிலச் சட்டங்கள், ஓர் இந்துப் பெண்ணின் சட்ட உரிமைகள் உட்பட ஏழு தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "அறிவுசார் சொத்துரிமைச் சட்டம்" [1]எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் சட்ட நூல்களை எழுதிவருகிறார். சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். நாடெங்கும் பயணம் செய்து கோயில் கட்டிடக் கலையின் நுட்பங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் என இவர் எடுத்த பல இயற்கை சார்ந்த புகைப்படங்களும் பரிசுகளை வென்றுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சொத்துரிமை மாற்றுச் சட்டம்", www.tamildigitallibrary.in (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-31
  2. "பொதுமக்களையும் படிக்க வைப்பதுதான் சட்டத் தமிழுக்கு வெற்றி: ஆ.சந்திரசேகரன் நேர்காணல்", Hindu Tamil Thisai, 2022-01-26, பார்க்கப்பட்ட நாள் 2023-12-31
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சந்திரசேகரன்&oldid=3857126" இலிருந்து மீள்விக்கப்பட்டது