பேச்சு:ஆற்காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்காடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்க் காரணம்[தொகு]

ஆல்+காடு=ஆற்காடு. ஆல மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அப்பெயர் ஏற்பட்டது.2409:4072:591:95B7:0:0:26FC:18A0 06:06, 17 சூலை 2020 (UTC)[பதிலளி]

=ஆர்க்காடு பெயர்க் காரணம்.[தொகு]

சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் 'ஆர்' என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு ஆகும். ஆர்க்காடு என்ற ஊர்ப்பெயரே இன்று மாவட்டத்திற்கும் பெயராக வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு 'அழிசில்' என்ற குறுநில மன்னனுக்கு உரியதாய் இருந்துள்ளது. இப்பொழுது வடவார்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் இவ்வூர் காணப்படுகிறது.

"படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்" 2

என்னும் அடிகள் ஆர்க்காடு சோழர்களின் நகரமாக இருந்தததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக 'ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்' என்னும் புலவர் காணப்படுகின்றார்.

இதனடிப்படையிலும், தமிழ்ச்சான்றோர்கள் பலர் ஆர்க்காடு என்று பயன்படுத்தி வருவதையும், அதுபோழ்து பலர் ஆற்காடு என்று பயன்படுத்துவது தவறு என்று எழுதியுள்ளதையும் கருத்திற்கொண்டு இப்பக்கம் உருவாக்கப் பட்டது.

எனவே, பொறுப்பில் உள்ளவர்கள் ஆவன செய்திட வேண்டுகின்றோம்.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 06:15, 15 சனவரி 2013 (UTC)--சீராசை சேதுபாலா./உரையாடுக. 06:15, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆர்க்காடு என்ற வார்த்தையே சரியானது என்ற கருத்து ஏற்கப்படுகிறதா / மறுக்கப்படுகிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

பெயர்க் காரணம்.[தொகு]

ஆல்+காடு=ஆற்காடு.

ஆல மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், 'ஆற்காடு' என்ற பெயர் ஏற்பட்டது.

முற்காலத்தில், ஊர்களின் பெயர்கள், அந்த இடங்களைச் சார்ந்த மரங்கள், தெய்வங்கள், நிலப்பரப்புகளின் முக்கியத்துவங்களின் அடிப்படைகளில் பெயரிடப்பட்டன. Helppublic (பேச்சு) 07:12, 17 சூலை 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆற்காடு&oldid=3785128" இலிருந்து மீள்விக்கப்பட்டது