பவுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவுரி என்பது முருகன் ஆடிய ஆட்டங்களில் ஒன்று. வேலன் ஆடும் வெறியாட்டம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. திருச்செந்தூர் கடலோரம் உள்ள ஊர். பௌவம் என்னும் சொல் அலையையும், அலையெறியும் கடலையும் குறிக்கும். முருகன் சூரபன்பனைக் கடல் நடுவே கொன்ற வரலாற்றைக் கொண்ட ஊர் திருச்செந்தூர். முருகன் பௌவத்தில் ஆடிய ஆட்டம் ‘பவுரி’. இந்த ஆட்டத்தை 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. உடைமணி கனக பரிபுரம் முரல ஒருமுறை பவுரி கொண்ட மெய்க்கூத்தினர்
  2. பாடும் கவுரிபவுரி கொண்டாட (68)
  3. வேதாகமப் பவுரி வீசும் களாசநிலை ஆதார சத்தி அபிடேகம்
  4. காளை பவுரி வந்து (நிரைமீட்சிச் சருக்கம் 98)
  5. கண்ணி 107
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுரி&oldid=1392814" இலிருந்து மீள்விக்கப்பட்டது