இந்திரகிரி அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரகிரி
1347–1945
தலைநகரம்இந்திரகிரி
பேசப்படும் மொழிகள்சமசுக்கிருதம், மலாயு
சமயம்
தொடக்கத்தில் பௌத்தம், பின்னர் இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் - மன்னர் 
வரலாறு 
• தொடக்கம்
1347
• முடிவு
1945
முந்தையது
பின்னையது
[[பகாருயுங் அரசு]]
[[அச்சே சுல்தானகம்]]
ஒல்லாந்து கிழக்கிந்தியா
இந்தோனேசியா
இந்தோனேசிய வரலாறு
ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமநகரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுந்தா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கெடிரி அரசு (1045–1221)
சிங்காசாரி அரசு (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முசுலிம் அரசுகளின் எழுச்சி
இசுலாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தான் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

இந்திரகிரி அரசு அல்லது இந்திரகிரி சுல்தானகம் என்பது தற்காலத்தில் இந்தோனேசியாவின் ரியாவு மாகாணத்தின் இந்திரகிரி ஹிலிர் மாவட்டம், இந்திரகிரி ஹுலு மாவட்டம் என்பவற்றை உள்ளடக்கிய பகுதியிலிருந்த ஒரு மலாய சுல்தானகம் ஆகும். இவ்வரசு ஒரு காலத்தில் பகாருயுங் அரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. எனினும், பிற்காலத்தில் ஜம்பி சுல்தானகம், சியாக் சுல்தானகம், அச்சே சுல்தானகம் என்பவற்றுடன் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டது.

பெயர்க் காரணம்[தொகு]

இந்திரகிரி என்னும் பெயர் சமசுக்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இங்கே இந்திரா என்பதன் பொருள் மன்னர் என்பதாகும். கிரி என்பதன் பொருள் மலை அல்லது உயர் தகைமை என்பதாகும். எனவே இந்திரகிரி என்பதன் பொருள் மலையரசன் என்பதாகும்.

தோற்றம்[தொகு]

1515 ஆம் ஆண்டு வரை இந்திரகிரி அரசும் அதன் துறைமுகப் பகுதியும் மினங்கபாவு மன்னரின் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசாகவே இருந்தது[1]. பின்னர் இந்திரகிரியின் உள்ளேயும் வெளிநாட்டினருடனும் தொடர்புகளைப் பேணுவதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னரேயே இந்திரகிரி ஓர் இறைமையுள்ள சுல்தானகமாக மாறியது.

இவ்வரசு அமைந்த பகுதி குவாந்தான் அரசுடன் கடல் எல்லையைக் கொண்டிருந்தது. சுமாத்திராவின் உட்பகுதியில் அமைந்திருந்த மினங்கபாவு அரசின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான துறைமுகப் பகுதியாகவும் இது விளங்கியது. இதன் எல்லை சுமாத்திராவின் உள்ளே பத்தூர் ஏரி வரையும் கிழக்கு சுமாத்திராப் பகுதிகளும் உள்ளடங்கியதாகக் காணப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Cortesão, Armando, (1944), The Suma Oriental of Tomé Pires, London: Hakluyt Society, 2 vols.

வெளித்தொடுப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரகிரி_அரசு&oldid=3877021" இலிருந்து மீள்விக்கப்பட்டது