மணக்கால் நம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணக்கால் நம்பி
பிறப்புராமமிச்ரர்
மணக்கால், திருச்சி, தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

மணக்கால் நம்பி உய்யக்கொண்டாரின் மாணாக்கர். ஆளவந்தாரின் ஆசிரியர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி திருவருள் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் உய்யக்கொண்டாரால் தமது காலத்தில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அவர் திருநாடு அலங்கரிக்கும் [1] முன்பு தம் ஆசிரியர் தமக்கு இட்ட பணியைத் தன் மாணாக்கர், மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். நம்பியும் தனக்களிக்கப்பட்டப் பணியினை நிறைவேற்றினார்.

மணக்கால் நம்பி குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழி பாடல்களைப் போற்றி எழுதியுள்ள கட்டளைக் கலித்துறையாலான தனியன்

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. காலமானதைக் குறிக்கும் வைணவ சொல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணக்கால்_நம்பி&oldid=2718278" இலிருந்து மீள்விக்கப்பட்டது