அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

ஆள்கூறுகள்: 13°00′39″N 80°14′08″E / 13.010887°N 80.235429°E / 13.010887; 80.235429
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
குறிக்கோளுரைProgress Through Knowledge
வகைபொது
Active1978–தற்போதுவரை
வேந்தர்கொனியேட்டி ரோசையா
துணை வேந்தர்பி. காளிராஜ்[1][2] (Officiating)
அமைவிடம், ,
இணையதளம்www.annauniv.edu

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை (Anna University, Chennai) இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னையில் அமைந்துள்ள  ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். சென்னை பல்கலைக்கழகமானது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை (தரமணி வளாகம்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருச்சி , அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்,அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், மதுரை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருநெல்வேலி என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட போது 2007 ஆம் ஆண்டு  பிப்ரவரி 1 ஆம் நாள் நிறுவப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை ஆகிய நான்கு கல்லுாரிகளை உள்ளடக்கியது.

2011 ஆம் ஆண்டு செப்டம்பா் 14 ஆம் நாள் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க  ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.[3]

மண்டல அலுவலகங்கள்[தொகு]

வரலாறு[தொகு]

கிண்டி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சி.என். அண்ணாதுரை அவர்களின் சிலை

உருவாக்கம்[தொகு]

  • 1978 செப்டம்பர் 4 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகச் சட்டம் 1978 (தமிழ்நாடு சட்டம் 30, 1978) -இன் மூலமாக தமிழ்நாடு அரசு' அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை (முந்தைய பெயர் - அண்ணா பல்கலைக்கழகம்) உருவாக்கியது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமானது முந்தைய சென்னை பல்கலைக் கழகத்தின் பிரிவுகளான பொறியியல் கல்லுாரி, கிண்டி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, மற்றும் சென்னை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
  • மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரிகளாகின. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரை் சி. என். அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டது.
  • 1982 ஆம் ஆண்டில் பெயரில் இருந்த “பேரறிஞர்“ மற்றும் “தொழில்நுட்பம்“ ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4]

மறு உருவாக்கம்[தொகு]

  • 2001: 2001 ஆம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்தம் 2001-இன் கீழ், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு இணைப்பு ஏற்படுத்தக்கூடிய பல்கலைக்கழகமாக மாறியது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுாரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதன் மூலம் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், ஆறு அரசு பொறியியல் கல்லுாரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லுாரிகளும் 426 சுயநிதி பொறியியல் கல்லுாரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. [சான்று தேவை]
  • 2007: 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 1இல் எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முடிவின் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகமானது ஆறு பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டது. அவை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்துார், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருநெல்வேலி மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை.[5] இந்த நிறுவனங்கள் முறையாக 2007 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தொடங்கப்பட்டவை.
  • 2011: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியில் இந்தப் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஒன்றிணைக்க ஒரு சட்ட மசோதா நிறைவேறியது. இருப்பினும், தனித்தனியான பல்கலைக்கழகங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன.[6]
  • 2012: ஆகத்து 2012 இலிருந்து, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி ஆகிய அனைத்தும் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டன. இப்போது அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன. :
முன்னதாக அழைக்கப்பட்ட பெயர் (ஆகத்து 2012-க்கு முன்னர்) தற்போது அழைக்கப்படுவது (ஆகத்து 2012-க்குப் பிறகு)
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (AUT) அண்ணா பல்கலைக்கழகம் - மண்டல அலுவலகம் (AU-RO)
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (AUT) - பல்கலைக்கழக வளாகம் (அல்லது) பொறியயில் கல்லுாரி அண்ணா பல்கலைக்கழகம் - மண்டல வளாகம் (அல்லது) பொறியியல் கல்லுாரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "VC's Desk". annauniv.edu. Archived from the original on 7 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Venugopal, Vasudha (2 August 2012). "Kaliraj takes over as Anna University's officiating V-C". The Hindu (சென்னை, இந்தியா). http://www.thehindu.com/news/cities/chennai/article3713740.ece. 
  3. "The Hindu : States / Tamil Nadu : House passes Bill to amend Anna University Act". thehindu.com (Chennai, India: தி இந்து). September 15, 2011 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103033457/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2455344.ece. பார்த்த நாள்: 18 September 2011. 
  4. Tamil Nadu Act 26 of 1982[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Welcome to Anna University of Technology, Coimbatore". annauniv.ac.in. Archived from the original on 20 June 2009. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010.
  6. "AUT merger not total, universities separately handle affiliation - Times Of India". indiatimes.com. 3 February 2012 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928221204/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-03/chennai/31021080_1_aut-chennai-vice-chancellor-c-thangaraj-affiliation-anna-university. பார்த்த நாள்: 7 May 2012. 

வெளியிணைப்புகள்[தொகு]