சரப புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரப புராணம் என்பது சரபம் என்னும் பறவை உருவம் கொண்டு சிவபெருமான் நரசிங்க உருவம் கொண்ட திருமாலை அடக்கிய வடமொழிப் புராணக் கதையைத் தமிழில் கூறும் நூல். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இது இயற்றப்பட்டது.

சரப புராணம் 431 பாடல்கள் கொண்டது.
பாயிரம், நரசிங்க உற்பத்திச் சருக்கம், கடவுளர் முறையீடு சருக்கம், வீரபத்திரன் எழுச்சி, அறிவுறுத்திய சருக்கம், சலந்தரன் வதைச் சருக்கம், சக்கரம் பெற்ற சருக்கம், நரசிங்கர் வதை சருக்கம் என ஏழு சருக்கங்களைக் கொண்டது. [1]

இந்த நூலில் உள்ள பாடல் ஒன்று. எடுத்துக்காட்டு. நரசிங்கத்தின் அடம்பிடித்த செயல்களை முறையிட்ட தேவர்களின் முன் சிவபெருமான் காட்சி தருகிறார்.

கங்கைமுடிச் சடைமுடியும் கண்மூன்றும் விண்மூன்றும்
அங்கழியா தருள்மிடலும் அணிப்புயங்கள் ஒருநான்கும்
செங்கையணி மான்மழுவும் சேயிழையாள் ஒருபாலும்
பொங்க எதிர் முன்னின்றான் பூ வனங்கள் தொறும் நின்றான்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. வடமொழியில் சரபமூர்த்தி வரலாறு 'சரபோபநிடதம்' என்னும் நூலில் 35 சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரப_புராணம்&oldid=1428838" இலிருந்து மீள்விக்கப்பட்டது