புணை விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசில் நாட்டில் தலைப்புணை ஓட்டல்
இக்கால விளையாட்டில் கடைப்புணை ஓட்டல்

புணையில் ஏறி விளையாடும் விளையாட்டைப் புணை விளையாட்டு என்கிறோம். இதுவும் சங்ககாலத்தில் நடைபெற்ற விளையாட்டுகளில் ஒன்று. புணை என்பது படகு.

படகை முன்புறமாகச் செலுத்துவதும், பின்புறமாகச் செலுத்துவதும் இக்காலத்தில் உண்டு. இவற்றை முன்படகு (canoeing, kayaking) பின்படகு (rowing) என்று நாம் குறிப்பிடலாம்.

ஆற்றுவெள்ளத்தில் நீராடிய பண்டைத் தமிழர் இந்த இருவகையான படகோட்டும் முறைகளையும் பயன்படுத்தி விளையாடினர் எனக் கொள்ளலாம். முன்படகைத் தலைப்புணை என்றும், பின்படகைக் கடைப்புணை என்றும் பாடல் குறிக்கிறது எனலாம். [1]

பலர் புணைமேல் ஏறி ஓட்டி நீரில் விளையாடினர். தலைவன் புணையை ஒருத்தி பின் தொடர்ந்தாள். (ஆணைப் பின் தொடரும் பெண்ணை பழங்கால மரபுப்படி பரத்தை என்றே கொள்ளவேண்டும்) அவன் தலைப்புணையில் முன்னோக்கிச் சென்றால் அவளும் தலைப்புணையில் முன்னோக்கி வந்து அவனைத் தன்னவனாக்கிக்கொள்ளப் பின் தொடர்ந்தாள். அவன் கடைப்புணையில் பின்னோக்கிச் சென்றால் அவளும் கடைப்புணையில் பின்னோக்கி அவனைத் தொடர்ந்தாள். அவன் புணையைக் கைவிட்டுவிட்டு நீரோடு மிதந்து சென்றால், அவளும் அவ்வாறே செய்து அவனைத் தொடர்ந்தாளாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
    கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
    புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
    ஆண்டும் வருகுவள் ((குறுந்தொகை 222)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புணை_விளையாட்டு&oldid=3093476" இலிருந்து மீள்விக்கப்பட்டது