லம்பாசா

ஆள்கூறுகள்: 16°26′S 179°22′E / 16.433°S 179.367°E / -16.433; 179.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லம்பாசா(Lambasa) பிஜி நாட்டில் உள்ள நகரம். இது வனுவா லெவு தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய ஊரான இது, மூன்று புறமும் நீரால் சூழப்பட்டது. பிஜி நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் வனுவா லெவு, விட்டி லெவு ஆகிய தீவுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர்.

லம்பாசாவைச் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளன. கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. அரசியல் மாற்றங்கள் காரணமாகவும் சந்தையில் விலைசரிவின் காரணமாகவும் விவசாயம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விட்டி லெவு தீவிற்குச் சென்று குடியேறுகின்றனர், மருத்துவமனை, திரையரங்கு, உணவகங்கள் ஆகியவை இத்தீவில் அதிகமானவை இங்குதான் உள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லம்பாசா&oldid=2084843" இலிருந்து மீள்விக்கப்பட்டது