கே. என். சிவராஜ பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவராஜ பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெ. என். சிவராஜ பிள்ளை
பிறப்புகே. நாராயண சிவராஜ பிள்ளை
1879
இறப்பு1941 (அகவை 61–62)
பணிபேராசிரியர்
பணியகம்சென்னைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவரலாற்றாய்வாளர், பேராசிரியர்

கே. என். சிவராஜ பிள்ளை (நாராயண சிவராஜ பிள்ளை, K. Narayana Sivaraja Pillai; 1879–1941) ஓர் இந்திய வரலாற்று ஆய்வாளரும், திராவிடவியலாளரும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவராஜ பிள்ளை காவல் துறையில் பணியாற்றியவர். திருவனந்தபுரம் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையின் வழிகாட்டலில் சிவராஜ பிள்ளை தமிழிலும், ஆய்வுத் துறையிலும் புலமை பெற்றார். அவரது ஆசியுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளை நடத்தி வந்தார். 'மலபார் குவார்ட்டர்லி ரிவியூ' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகப் ஒன்பதாண்டுகள் பணியாற்றினார். சென்னைப் பலகலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முதல் தலைவராய் விளங்கியவர்.[1] இக்காலத்தில் அவர் புறநானூற்றின் பழமை என்ற தமிழ் ஆய்வு நூலையும், தமிழகத்தில் அகத்தியர், பண்டைத் தமிழரின் கால அடைவு ஆகிய இரண்டு ஆங்கில ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[1] இவர் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.[1] சேர் பொன்னம்பலம் இராமநாதன் இவரை இலங்கைக்கு அழைத்து சில ஆண்டுகள் கம்பராமாயண ஆய்வை மேற்கொள்ளச் செய்தார்.[1]

இவருடைய தமையனார் கெ. என். குமரேச பிள்ளை கம்பராமாயணப் பிரசங்கம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்.[1]

இவரது நூல்கள்[தொகு]

  • மேக மாலை (1927)
  • உந்து என்னும் இடைச்சொற் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழைமை (1929, சென்னப் பல்கலைக்கழகம்)
  • முற்காலத் தமிழர்களின் வரலாறு (1932, சென்னைப் பல்கலைக்கழகம்)
  • தமிழ் நிலத்தில் அகத்தியர், சென்னைப் பல்கலைக்கழகம்)
  • சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி (1968)
  • கம்பராமாயணக் கௌஸ்துபம் (1979, சென்னைப் பல்கலைக்கழகம்)
  • The Chronology of the Early Tamils (1932, சென்னைப் பல்கலைக்கழகம்)
  • Agastya in the Tamil Land (சென்னைப் பல்கலைக்கழகம், 1985)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._சிவராஜ_பிள்ளை&oldid=3487736" இலிருந்து மீள்விக்கப்பட்டது