இந்திராணி நடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராணி எலிசபெத்து நடேசன்
பிறப்புசிங்கப்பூர்
தேசியம்சிங்கப்பூர்
இனம்சீனர்
பணிசமூக சேவகர், தன்னார்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1976 - 2008
அறியப்படுவதுஅதிக குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததற்காக சிங்கப்பூர் சமூக அமைச்சின் விருது பெற்றமைக்கு

இந்திராணி நடேசன் (Indranee Elizabeth Nadisen), சிஙப்பூரைச் சேர்ந்த குழ்ந்தைகள் பாதுகாப்புக்கு போராடும் சமூகத் தன்னார்வலர். சிங்கப்பூர் சமூக வளர்ச்சி அமைச்சின் குழந்தைத் தத்தெடுப்புத் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், ஒதுக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளை தாதியாக தத்தெடுத்திருக்கிறார். இத்திட்டத்தில் அதிகப் பங்கெடுத்து 43 குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். இத்திட்டத்தின் முன்மாதிரி என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[1] இந்திராணி சீன இனத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இந்தியக் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டார். வளர்ந்த பிறகு தானும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் உரிய நேரத்தில் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவார்.[2] 2001 ஆம் ஆண்டில் சமூக வளர்ச்சி மற்றும் விளையாட்டுக்கான அமைச்சின் சார்பில் இவ்வமைச்சின் நண்பர் என்ற விருதினைப் பெற்றார்.[3]. 2003 ஆம் ஆண்டில் ரீடர்சு டைசசுட்டு, முன்மாதிரி ஆசியர் விருதினை வழங்கியது.[4]/ref>

மேற்கோள்கள்[தொகு]

  1. Kenny, Chee (2008-09-10). "Model foster mum calls it a day". My Paper. p. A3. 
  2. Melissa, Sim (2008-09-10). "She's foster mum to 43; Madam Indranee has been taking in children for the past 32 years". Singapore: Straits Times. p. B1. 
  3. Recipients of the Outstanding MCDS Volunteer Award and Friend of MCDS Award. Singapore: Ministry of Community Development, Youth and Sports இம் மூலத்தில் இருந்து 2007-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070714133829/http://www.mcys.gov.sg/MCDSFiles/download/BOOKLET.pdf. பார்த்த நாள்: 2008-12-06. 
  4. Jane, Ng (2003-01-11). "They're all inspiring". Singapore: Straits Times. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_நடேசன்&oldid=3860999" இலிருந்து மீள்விக்கப்பட்டது