அண்ணா மேம்பாலம்

ஆள்கூறுகள்: 13°03′09″N 80°15′04″E / 13.05238°N 80.25104°E / 13.05238; 80.25104
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா மேம்பாலம்
Anna Flyover
Anna Flyover
அண்ணா மேம்பாலம்
Location
சென்னை, இந்தியா
அமைவுகள்:13°03′09″N 80°15′04″E / 13.05238°N 80.25104°E / 13.05238; 80.25104
Roads at
junction:
அண்ணா சாலை
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
கத்தீட்ரல் சாலை
Construction
Type:மேம்பாலம்
Lanes:4
Constructed:1973 by East Coast Construction and Industries
Opened:1973 (1973)
Maximum
height:
4.3 மீட்டர்கள் (14 அடி)
Maximum
width:
20 மீட்டர்கள் (66 அடி)

அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்னையின் மையப் பகுதியில் அண்ணா சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகும். 1973 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும் ஆகும். இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது. ஜெமினி ஸ்டூடியோஸ் இங்கு அமைந்திருந்ததால் இப்பகுதி ஜெமினி சர்க்கிள் எனவும் இங்கு கட்டப்பட்ட மேம்பாலம் ஜெமினி மேம்பாலம் எனவும் அழைக்கப்பட்டன. குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20,000 வாகனங்கள் இப்பாலத்தின்வழி செல்கின்றன. ஏர்செல் செல்லுலர் நிறுவனம் இப்பாலத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டு, பாலத்தில் ஒளி விளக்குகளை நிறுவி பராமரித்தது.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_மேம்பாலம்&oldid=3753635" இலிருந்து மீள்விக்கப்பட்டது