அரையுயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் உயிரெழுத்துக்கள் 12. இவை ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரை. மெய்யெழுத்து 18. இந்தப் பதினெட்டில் வ, ய ஆகிய இரண்டு எழுத்துக்களையும் மொழியியலாளர்கள் அரையுயிர் [1][2] எனக் குறிப்பிடுவர். இலக்கண நூலார் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுவர்.

இரண்டு உயிரெழுத்துக்களுக்கு இடையே தோன்றும் மெய்யெழுத்தை உடம்படுமெய் என்கிறோம்.

கிளி என்னும் சொல் [இ]-ல் முடிகிறது.
அழகு என்னும் சொல் [அ]-ல் தொடங்குகிறது.
இரண்டும் ஒன்று சேரும்போது [கிளி அழகு], [கிளி ய் அழகு] கிளியழகு என வருகிறது.

பா என்னும் சொல் [ஆ]-ல் முடிகிறது.
இனிது என்னும் சொல் [இ]-ல் தொடங்குகிறது.
இரண்டும் ஒன்று சேரும்போது [பா இனிது]. [பா வ் இனிது] பாவினிது என வருகிறது.

தமிழில் இந்த இரண்டு மெய்யெழுத்தொலிகள் மட்டுமே இவ்வாறு வருகின்றன. ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும் இடையின எழுத்துக்கள். இவற்றில் [ய], [வ] என்னும் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே இயல்பெழுத்துக்கள். ஏனையவை நாவின் சுழற்சியால் பிறப்பவை. எனவே இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அரையுயிர்களாக வருகின்றன.

அறிவு என முடியும் திருக்குறள் பாடல்கள் உள்ளன. இச்சொல் அறிவுடைமை எனக் குற்றியலுகரம் போலப் புணர்வதை அறிவோம். காரணம் [வ] எழுத்தின் அரையுயிர்த் தன்மையே.

இ, ஈ, ஏ - என்பன பல்லெழுத்துக்கள். எனவே இவை பல்லெழுத்து அல்லாத [ய] என்னும் அரையுயிரைச் சேர்த்துக்கொள்கின்றன.
அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, - என்பனவற்றில் பல்லொலி இல்லை. எனவே இவை [வ] பல்லெழுத்தை அரையுயிராக இணைத்துக்கொள்கின்றன.

பிற மொழிகளிலும் இந்த நிலை உண்டு.

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரையுயிர்&oldid=2753067" இலிருந்து மீள்விக்கப்பட்டது