உடம்படுமெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மொழியில் சொல்லோடு சொல் சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். உயிர் எழுத்தில் முடியும் சொல்லோடு உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் வந்து சேரும்போது இடையே ய், வ் ஆகிய இரண்டு எழுத்துகளை ஆசாகக் கொள்ளும். [1][2] இவை இரண்டையும் அரையுயிர் என இலக்கண நூலார் குறிப்பது வழக்கம்.

ஒலி இயல்பு[தொகு]

அண்மைக் காலம் வரையில் திண்ணைப் பள்ளிகளில் எழுத்துகளை ஓசையுடன் கற்பித்துவந்தனர். அவற்றில் இந்த உடம்படுமெய் பிறப்பதைக் காணலாம்.

அ - ஆனா
ஆ - ஆவன்னா
இ - ஈனா
ஈ - ஈயன்னா
உ- ஊனா
ஊ - ஊவன்னா
எ - ஏனா
ஏ - ஏயன்னா
ஐ - ஐயன்னா
ஒ - ஓனா
ஓ - ஓவன்னா
ஔ - ஔவன்னா

இவற்றில் நெடில் எழுத்துகளோடு இணைந்துள்ள எழுத்துகளைக் கழுத்தில் கொண்டு நன்னூல் உடம்படுமெய் எழுத்துக்களைப் பாகுபாடு செய்து காட்டுகிறது.

பொருள் இயல்பு[தொகு]

மா, (விலங்கு), (பொருட்பெயர்) மாவன்று ஆவன்னா வாய்பாட்டு நெறி
மா, (பெரிய), (உரிச்சொல்) மாயிரு ஞாலம் இயல்பு மாற்றம்
ஆ, (பசு), (பொருட்பெயர்) ஆவன்று ஆவன்னா வாய்பாட்டு நெறி
ஆ, (சுட்டெழுத்து அ நீண்டு நிற்றல் ஆயிடை இயல்பு மாற்றம்
  • பொருட்பெயருக்கு வாய்பாட்டு நெறியில், அதாவது இயல்பு நெறியில், அதாவது நன்னூல் வரையறை நெறியில் உடம்படுமெய் தோன்றும்.
  • பொருட்பெயர் அல்லாத சொல்லுக்குப் பொருள் உணருத்துவதற்காக, இயல்பு நெறியை மாற்றி உடம்படுமெய் அமைக்கப்படும். இது பொருட்புணர்ச்சி

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
    உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். தொல்காப்பியம் புணரியல் 38
  2. இஈ ஐவழி யவ்வு மேனை
    யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும். - நன்னூல் 162

வெளிப் பார்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடம்படுமெய்&oldid=3323832" இலிருந்து மீள்விக்கப்பட்டது