தொல்காப்பியம் உயிர் மயங்கியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களைக் கொண்டது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் ஏழாவது இயலாக உள்ளது உயிர்மயங்கியல். இந்த இயலில் 93 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள செய்திகள் இங்குத் தரப்படுகின்றன. எந்தச் செய்தி எந்த நூற்பாவில் சொல்லப்பட்டுள்ளது என்பது ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த எண்கள் இந்த இயலில் வரும் நூற்பா வரிசை எண்ணைக் குறிக்கும்.

அகர ஈறு[தொகு]

திரிபு

  • க ச த ப வரின் இன-ஒற்று மிகும். -1
விளக்குறிது, மகக்குறிது, சிறிது, தீது, பெரிது
  • வினையெஞ்சு கிளவி ஒற்று மிகும் -2
உணக்கொண்டான், தினக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான்
  • உவமக்கிளவி ஒற்று மிகும் -2
புலி போலக் கொன்றான்
  • என என்கின்ற எச்சம் ஒற்று மிகும் -2
கொள்ளெனக் கொண்டான்
  • சுட்டின் இறுதி ஒற்று மிகும் -2
அக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன்
  • ஆங்க என்னும் உரையசைக்கிளவி ஒற்று மிகும், -2
ஆங்கக் கொண்டான்,
  • சுட்டின்முன் ஞ ந ம வரின் அவ்வொற்று மிகும் -3
அஞ்ஞாண், அந்நூல், அம்மணி
  • சுட்டின்முன் ய வ வரின் வ-ஒற்று மிகும் -4
அவ்யாழ், அவ்வடம்
  • சுட்டின்முன் உயிரெழுத்து வந்தால் வ-ஒற்று மிகும் -5
அவ்வணில், அவ்வாடை, அவ்விலை
  • சுட்டு செய்யுளில் நீண்டு வரும் -6
‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’
  • சாவ என்னும் சொல்லிலுள்ள இறுதி வ கெடவும் செய்யும் -7
சாக்குத்தினான்.

இயல்பு -8

  • அன்ன என்னும் உவமக்கிளவி
பொன் அன்ன குதிரை
  • அண்மை சுட்டிய விளிநிலைக்கிளவி
ஊர கொள், ஊர செல், ஊர தா, ஊர போ
  • செய்ம்மன என்னும் தொழிலிறு சொல்
உண்மன கன்று
  • ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவி
செல்க காளை
  • செய்த வாய்பாட்டுப் பெயரெச்சம்
உண்ட குதிரை, சென்ற குதிரை, உண்ணாத குதிரை, நல்ல குதிரை
  • செய்யிய வாய்பாட்டு வினையெஞ்சு கிளவி
உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான்
  • அம்ம என்னும் உரைபொருட் கிளவி
அம்ம கொற்றா, சாத்தா, அம்ம தேவா, அம்ம பூதா
  • பல-இறுதி
பல குதிரை, பல சேவல், பல தூண், பல பானை

திரிபு

  • வாழிய என்பதில் ய கெடும் -9
வாழி கொற்றா
  • உரைபொருட் கிளவி நீண்டும் வரும் -10
அம்மா கொற்றா
  • பல என்னும் சொல்லும் செய்யுளில் நீளும் -11
“பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்”
  • தொடரல்-இறுதி தம்முன் தாம் வரின் லகரம் றகர-ஒற்று ஆதலும் உண்டு -12
பற்பல, சிற்சில
  • வல்லெழுத்து இயற்கை உறழும் -13
பலப்பல, பலபல, சிலச்சில, சிலசில
  • வேற்றுமையிலும் மிகும் -14
விளக்குறுமை
  • மரப்பெயராயின் மெல்லெழுத்து -15
விளங்கோடு
  • மகப்பெயர்க் கிளவிக்கு இன்-சாரியை -16
மகவின் கை, மகவின் செவி, மகவின் தலை, மகவின் பல்
  • மகவு சொல்லுக்கு அத்தும் வரும் -17
மகத்துக்கை
  • பல என்னும் சொல் உருபியலில் சொல்லப்பட்டது போல் வரும் -18
பலவற்றுக்கோடு

ஆகார ஈறு[தொகு]

திரிபு

  • அ-ஈறு வந்தது போல் வரும் -19
தாராக் கடிது
  • செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் அகர-ஈற்றில் வந்தது போல் வரும் -20
உண்ணாக் கொண்டான், உண்ணாக் கொற்றன்
  • உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி அ பெற்று வரும் -21
உவாஅப் பதினான்கு (பௌர்ணமியும் பதினான்கு நாளும்)

இயல்பு -22

  • ஆ முன் இயல்பு
ஆ குறிது, சிறிது, தீது, பெரிது
  • மா மின் இயல்பு
மா குறிது, சிறிது, தீது, பெரிது
  • விளிப்பெயர்க் கிளவி முன் இயல்பு
ஊர காண், செல், தா, போ
  • யா என் வினா முன் இயல்பு
யா குறிய, சிறிய, தீய, பெரிய
  • பலவற்று இறுதி முன் இயல்பு
உண்ணா குதிரை, தின்னா குதிரை, செந்நாய், தகர், பன்றி
  • ஏவல் குறித்த உரையசை மியா முன் இயல்பு
கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா
  • தன்தொழில் உரைக்கும் வினா முன் இயல்பு
உண்கா (உண்ணட்டுமா) கொற்றா, சாத்தா, தேவா, பூதா

வேற்றுமையில்

  • வேற்றுமைப் பொருளில் மிகும் -23
தாராக்கால், (தாரா என்னும் பறவை) சிறகு, தலை, புறம்
  • குறியதன் முன் வரும் ஆ அகரம் பெறும் -24
பலாஅக்கோடு, செதில், தோல், பூ
  • ஓரெழுத்து மொழி முன் அ பெறும் -24
காஅக்குறை (கா = துலை, தராசு) காஅச்செய்கை, காஅத்தலை, காஅப்புறம்
  • இரா என்னும் சொல்லுக்கு அகரம் இல்லை. -25
இராக்கொண்டான் (இரவில் கொண்டான்)
  • நிலா என்னும் சொல் அத்துச்சாரியை பெறும். -26
நிலாத்துக் கொண்டான் (நிலா வெளிச்சத்தில் கொண்டான்) சென்றான், தந்தான், போயினான்
  • யா, பிடா, தளா மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிகும் -27
யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங்கோடு, செதில், தோல், புறம்
  • யா, பிடா, தளா வல்லெழுத்து மிகினும் மானம் (குற்றம்) இல்லை -28
யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு, செதில், தோல், புறம்
  • மாமரம் -29 மாஅங்கோடு எனவும் வரும்
  • ஆ (பசு) -30 ஆன்கோடு என வரும்
  • மா (விலங்கு) -29 மான்கோடு என வரும்
  • ஆனநெய் -30 என வருதலும் உண்டு
  • ஆன் முன் பீ வரின் ஆப்பி என அமையும் -31
  • சுறா என்னும் சொல் -32 “சுறவுக் கோட்டு அன்ன முன்னிலைத் தாழை” என வரும் (தாழம்பூ சுறாமீன் கொம்பு போல் இருக்கும்)

இகர ஊறு[தொகு]

திரிபு

  • இ முடிவு வேற்றுமையில் வல்லெழுத்து மிகும் -33
கிளிக்கால், கிளிச்சிறகு, கிளித்தலை, கிளிப்புறம்
  • இனிக் கொண்டான் (இனி என்பது காலம் காட்டும் பெயர்) -34,
  • அணிக் கொண்டான் (அணி = அந்த இடம்) -34,
  • தேடிக்கொண்டான் (வினையெஞ்சு கிளவி) -34, என வரும்
  • இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளில் இன்று என வரும் -35
‘உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே’ (கொற்றையான் புல்லரிசி உணவை உப்பில்லாமல் உண்பானாகுக)
  • சுட்டு முன் சொன்னது போல் வரும் -36
இஞ்ஞாலம், இந்நூல், இம்மணி, இவ்யாழ், இவ்வட்டு, இவ்வடை, இவ்வாடை, இவ்வௌவியம்
  • தூணிப்பதக்கு -37 என முன்போல் வரும்
  • நாழி + உரி என்பது நாடுரி என வரும் -38
  • பனி என்னும் சொல் பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான் என வரும் -39
  • வளி என்னும் சொல் வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான் என வரும் -40
  • உதிமரக் கிளவி உதிங்கோடு என மெல்லெழுத்து மிகும் -41
  • புளிமரக் கிளவி புளியங்கோடு என அம் சாரியை பெறும் -42
  • புளி என்பது புளிப்புச் சுவையை உணர்த்தின் புளிங்கூழ் என வரும் -43
  • புளிப்புச் சுவை புளிக்கூழ் என வல்லெழுத்தும் பெறும் -44
  • பரணி என்பது போன்ற நாளைக் குறிப்பது போன்ற பெயர் பரணியாற் கொண்டான் என்பது போல் வரும் -45
  • ஆடி என்பது போல் திங்களைக் குறிக்கும் பெயராயின் ஆடிக்குக் கொண்டான் என இக்குச்சாரியை பெற்று வரும் -46

ஈகார ஈறு[தொகு]

  • ஈ இறுதி தீக்கடிது என ஒற்று மிகும் -47
  • நீ, பீ, மீ என்னும் சொற்கள் இயல்பாக முடியும் -48
நீ குறியை, பீ குறிது, மீகண் (மேல்கண்)
  • மீ என்னும் இடத்தைக் குறிக்கும் சொல் வல்லினம் மிக்கு முடிவதும் உண்டு -49
மீக்கோள், மீப்பல்
  • வேற்றுமைக் கண்ணும் எற்று மிகும் -50
ஈக்கால், ஈச்சிறகு, ஈத்தலை, ஈப்புறம்
  • நீ என் ஒருபெயர் உருபியல் நிலையும் -51
நின்கை, நின்செவி, நின்தலை, நின்பல்

உகர ஈறு[தொகு]

  • உகர இறுதி அகர இறுதி போல் அமையும் -52
கடுக்குறிது, கடுச்சிறிது, கடுத்தீது, படுப்பெரிது
  • சுட்டெழுத்து முன்னும் அ-சுட்டு போல் முடியும் -53
உக்கொற்றன், உச்சாத்தன், உத்தேவன், உப்பூதன்
  • உஞ்ஞாண், உந்நூல், உம்மணி, உவ்யாழ், உவ்வட்டு, உவ்வணில், உவ்வாடை -54
  • அது, இது, உது என்னும் சுட்டு முன் அன்று என்னும் சொல் வரும்போது அதாஅன்று, இதாஅன்று, உதாஅன்று எனச் செய்யுளில் வரும் -55
  • அது என்னும் சொல் அதை என ஐ பெற்று வரும்போது அதைமற்றம்ம என வரும் -56
  • வேற்றுமைப் பொருளில் முன் சொன்னது போல் வரும் -57
கடுக்காய்
  • எரு, செரு என்னும் சொற்கள் -58
எருவங்குழி (அம் இடைச்சொல் பெற்று வந்தது), செருவக்களம் (செரு + அம்(அக்) + களம்) என வரும்
  • பழு என்பது போன்ற சொல் பழூஉப்பல் என்பது போல் உகரம் பெற்று வரும் -59
  • ஒடு என்னும் மரப்பெயர் உதி என்னும் மரப்பெயர் போல் வரும் -60
ஒடுங்கோடு
  • அது போன்ற சுட்டுமுதல் இறுதி உருபியலில் சொன்னதுபோல் வரும் -61
அதனை, இதனை, உதனை, (எதனை)

ஊகார ஈறு[தொகு]

  • ஊ இறுதி ஆ இறுதி போல் வரும் -62
கொண்மூக்கடிது
  • வினையெச்சம் உண்ணூக்கொண்டான் என வரும் -63
  • முன்னிலைக் கிளவி கைதூக்கொற்றா என வரும் -63
  • வேற்றுமை ஆயின் கொண்மூக்குழாம் (மேகக்கூட்டம்) என மிக்கு வரும் -64
  • குற்றெழுத்து இம்பர் உடூஉக்குறை என்பது போல் உகரம் பெற்று வரும் -65
  • ஓரெழுத்து மொழி முன்னும் உகரம் பெற்று வரும் -65
தூஉக்குறை (தூக்கு அளவு நிறையில் குறை)
  • பூ என்னும் பெயர் பூங்கொடி (அழகிய கொடி), பூக்கொடி (பூவை உடைய கொடி) என வரும் -66
  • ஊ என்னும் பெயர் ஆ என்னும் பெயர் போல் வரும் -67
ஊன்குறை
  • ஊ என்னும் பெயர் அக்கு என்னும் சாரியை பெற்றும் வரும் -68
ஊனக்குறை
  • ஆடூஉ, மகடூஉ என்னும் சொற்கள் இன்-சாரியை பெறும் -69
ஆடூஉவின் கை, மகடூஉவின் கை

எகர, ஒகர ஈறுகள்[தொகு]

எ ஒ எழுத்துக்கள் மொழியில் ஈற்றெழுத்தாக வருவதில்லை. முன்னிலை விளியில் அளபெடையாக வரும். இவற்றை இடைச்சொல் எனக் கொள்ளுதல் வேண்டும்.

  • அப்போது ஏஎ கொண்டான் (அம்பைப் கொண்டான்), ஓஒ கொண்டான் (மதகு அடைக்கும் பலகையைப் பற்றிக்கொண்டான்) என வரும் -70
  • தேற்ற ஏகாரத்தில் யானேஎ கொண்டேன் என வரும் -71
  • சிறப்பு ஓகாரத்தில் அவனோஒ கொண்டான் (வியப்பு) என வரும் -71

ஏகார ஈறு[தொகு]

  • ஏகாரத்தில் முடியும் சொல் ஊகாரத்தில் முடியும் சொல் போலப் புணரும் -72
சேக்கடிது (சே மரம் கடுமையானது)
  • மாறுகொள் எச்சம் இயல்பாகும் -73
யானே கொண்டேன், (நானே கொண்டேனா)
  • வினாவின் ஏ இயல்காகும் -73
நீயே கொண்டாய் (நீயா கொண்டாய்)
  • எண் ஏகாரம் இயல்பாகும் -73
கொற்றனே சாத்தனே தேவனே பூதனே போயினர்
  • வேற்றுமையில் வல்லொற்று மிகும் -74
வேக்குடம் (குயவன் சூலையில் வேதலை உடைய குடம்)
  • ஏ என்னும் சொல்லுக்கு எ சேர்ந்து வரும். -75
ஏஎக்கொட்டில் (அம்பு வைத்திருக்கும் கூடம்), ஏஎச்சாலை, ஏஎத்தூதை (அம்பறாத் தூணி), ஏஎப்புழை (அம்பு எய்த துளை)
  • சே என்பது மரத்தைக் குறித்தால் ஒடு என்னும் மரம் புணர்ந்தது போல் புணரும் -76
சேங்கோடு, சேஞ்செதிள், சேந்தோல், சேப்பூ
  • சே என்னும் சொல் பெற்றத்தைக் குறித்தால் இன்-சாரியை பெறும் -77
சேவின் கோடு, சேவின் செவி, சேவின் தலே, சேவின் புறம்

ஐகார ஈறு[தொகு]

  • ஐ இறுதி வேற்றுமையில் வல்லெழுத்து மிகும் -78
யானைக்கோடு
  • அவை என்னும் சுட்டு உருபியலில் சொன்னபடி முடியும். -79
அவையற்றுக்கோடு, அவற்றுக்கோடு
  • விசை, ஞெமை மரக்கிளவிகள் சே மரத்துக்குச் சொல்லப்பட்ட விதியில் முடியும் -80
விரைங்கோடு, ஞெமைங்கோடு
  • பனை, அரை, ஆவிரை மரப்பெயர்கள் அம்-சாரியை பெற்று வரும். பனை சொல்லில் ஐ கெடும் -81
பனங்காய், அரையங்கோடு, ஆவிரங்கோடு
  • பனை முன் அட்டு வந்தால் பனாஅட்டு என முடியும் -82
  • பனை முன் கொடி வந்தால் பனைக்கொடி என முடியும் -83
  • திங்களைக் குறிப்பிடும் ஐ இறுதியும், நாளைக் குறிப்பிடும் ஐ இறுதியும் முந்து கிளந்தவாறு முடியும் -84
சித்திரைக்குக் கொண்டான் (சித்திரை மாதம்), கேட்டையாற் கொண்டான் (கேட்டை நாள்)
  • மழை என்னும் சொல் வளி என்னும் சொல்லுக்குச் சொன்னதுபோல் முடியும் -85
மழையத்துக் கொண்டான்
  • வேட்கை + அவா என்பது செய்யுளில் வேணவா என வரும் -86

ஓகார ஈறு[தொகு]

  • ஓ இறுதி ஏ இறுதிபோல் முடியும் -87
ஓக்கடிது (ஓ = மதகு அடைக்கும் பலகை “ஓ இறந்து ஒலிக்கும் ஒலி” – சிலப்பதிகாரம்)
  • மாறுகொள் எச்சம், வினா, ஐயம் ஆகிய பொருள்களில் வரும் ஓ இயற்கையில் முடியும் -88
யானோ கொண்டேன் (யான் கொள்ளவில்லை என்னும் பொருளைத் தரும்போது), நீயோ கொண்டாய் (வினா), பத்தோ பதினொன்றோ (ஐயம்)
  • கொளலோ கொண்டான் (மற்றொன்றும் செய்தான் என்பதைக் குறிக்கும் மொழிந்தவற்று எச்சம்) -89
  • வேற்றுமைக்கண் ஒ எடையில் வரும் -90
ஓஒக்கடுமை
  • இல் என்னும் சொல் வந்தால் இயற்கை -91
கோ + இல் = கோயில் (ஊருக்குத் தலைமையான இல்லம்), கோவில் (அரசன் இல்லம்)
  • உருபியலில் சொன்னபடி வருவதும் உண்டு -92
கோஒன் கை (அரசன் கை)

ஔகார ஈறு[தொகு]

ஔ எழுத்தில் முடியும் சொல்கள் இரண்டு. அவை கௌ, வௌ.

  • இவை இடையில் உ பெற்று வரும் -93
கௌவுக்கடிது, வௌவுக்கடிது (கௌ = வாயால் கௌவு) (வௌ = பிறர் பொருளைப் பிடுங்கிக்கொள்)

இணைப்பு[தொகு]