இரவிமங்கலம் தொல்லியற்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவிமங்கலம் தொல்லியற்களம் என்பது பழனியிலிருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இரவிமங்கலம் பகுதியில் காணப்படும் தொல்லியல் எச்சங்களின் பகுதியாகும்.

சிறப்புகள்[தொகு]

  • பெருங்கற்கால சின்ன வகைகளான புதைமேடுகள், கற்படுக்கைகள், கல்திட்டைகள், குத்துக்கல், நடுகல், கல்லரண், கல்வட்டம் போன்ற அனைத்தும் இந்த களத்திலேயே கிடைக்கின்றன.அதனால் இக்களத்தை பெருங்கற்கால எச்சங்களின் களஞ்சியம் என்று கூறுகின்றனர்.
  • இந்த சின்னங்களின் விட்டம் 5 - 30 மீட்டர்கள் வரை வெவ்வேறு அளவிலுள்ளன.
  • யவனர் மூலம் தமிழக்த்துக்கு வந்ததாக கருதப்படும் அம்ப்போரா மதுச்சாடிகள் இங்கு கிடைப்பதால் இக்களம் யவனர் வணிகத்தளமாக விளங்கியதை அறிய முடிகிறது. இரவிமங்கலத்தின் கிழக்கே 6 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள கலையமுத்தூரில் 63 ரோமானிய தங்கக்காசுகள் கிடைத்தது இதை மேலும் உறுதி செய்கிறது.[1]
  • உலகின் மிகப்பெரும் பெருங்கற்காலத் தளமாக கருதப்படும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் இந்த இரவிமங்கலம் தளம் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டதாக தெ. வே. நாராயணமூர்த்தி என்ற ஆராய்ச்சியாளர் கருதுகிறார். இந்த எச்சங்கள் 200 ஏக்கர்களில் மிக நெருக்கமாகவும், 300 ஏக்கர்களில் பரவலாகவும், 500 ஏக்கர்களில் சிதறியும் காணப்படுவதாக இவர் கருதுகிறார்.
  • இங்கு இரும்பு உருக்காலைகள் இரண்டு இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாகவும், இரும்பு அச்சுகள் ஏராளமாக கிடைப்பதாகவும் அதை கொண்டு தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 8000 வரை கொண்டு செல்ல முடியும் என்பது இவர் துணிபு.

அழிந்து வரும் தொல்லியல் களங்கள்[தொகு]

தற்போது இக்களம் அழிந்து வரும் தொல்லியற்களங்களின் பட்டியலுள் உள்ளது.[2]

மேலும் பார்க்க[தொகு]

மூலம்[தொகு]

  • இரவிமங்கல்த்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் (2005). பண்டைத் தடயம். பாரிமுனை, சென்னை - 18: மணிவாசகர் பதிப்பகம். பக். 82- 86. 

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. நடன காசிநாதன். தமிழர் காசு இயல். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 
  2. www.thehindu.com(சூன் 26, 2011). "Iron Age burial site found near Tiruvannamalai". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: அக்டோபர் 20, 2012.