பேச்சு:செய் விலாசு மகால் (குவாலியர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேசு, இக்கட்டுரையில் உள்ள கொலு மண்டபம் என்பது கொலு வைக்கும் மண்டபமன்று. அரசன் கொலு வீற்றிருக்கும் அரசவை. தவறான உள்ளிணைப்புகளை இயன்றவரை தவிர்க்கலாம். நன்றி ! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:38, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr), புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைத் தலைப்புகளின் உள்ளிணைப்புகளை சேர்க்க ஒரு தானியங்கி எழுதி அதனை சோதனை செய்து பார்த்தேன், கவணக்குறைப்பாடு காரணமாக தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:31, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தினேசு, கட்டுரையை நகர்த்தியதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. ஆனால்,

  1. கிரந்தம் குறித்த ஒருமித்த கொள்கை முடிவு இன்னும் எட்டப்படவில்லையாதலால் எல்லாக் கட்டுரைத் தலைப்புகளிலும் கிரந்த எழுத்துக்களை நீக்கும் திட்டம் எதுவும் தங்களுக்கு உள்ளதா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
  2. கட்டுரையை நகர்த்தும் முன் கட்டுரைப் பேச்சுப் பக்கத்திலோ கட்டுரையின் முதன்மைப் பங்களிப்பாளரின் பேச்சுப் பக்கத்திலோ செய்தியிடுவது நற்பண்பு.
  3. பலரும் அறிந்த பெயர்களில் கிரந்தம் அகற்றும் போது அப்பெயரைக் கட்டுரையின் முதல் வரியில் கட்டாயம் தருதல் வேண்டும். உதாரணத்திற்கு இராமானுஜர் கட்டுரையை இராமானுசர் எனும் தலைப்புக்கு மாற்றும் முன் பேரா. செல்வா பேச்சுப்பக்கத்தில் செய்தி இட்டிருந்ததையும் இராமானுசர் (இராமானுஜர், என்று கட்டுரையின் முதல் வரியில் தந்துள்ளதையும் கருத வேண்டுகிறேன்.

தொடர்புடைய பக்கம் - பேச்சு:ஜாக்கி_செராப்

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:31, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr), இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன். கிரந்த எழுத்துகளை நீக்க திட்டம் எதுவும் இதுவரையிலும் எட்டப்படவில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:42, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:50, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் கிரந்தமகற்றலில் பெரியளவில் மறுப்பு இல்லை, காரணம் கூறாமையால் மீள தலைப்பை நகர்த்தினேன், கிரந்தப்பெயரை கட்டுரையின் முதல் வரியில் சேர்த்துவிடுங்கள் அப்போது தான் கூகிளில் தேடினால் கட்டுரை சிக்கும். தேவை என்றால் கிரந்தமகற்றிய பெயரிற்கு ஜாக்கி_செராப் கட்டுரையை நகர்த்தலாம். சரியான பலுக்கல் ஜாக்கி_ஷெராப், நானும் சற்று கிரந்தமகற்றியே தலைப்பை இட்டிருந்தேன், நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 14:52, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]