மதுரை பொன்னுசாமிப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை பொன்னுசாமிப் பிள்ளை (எ) பொன்னுசாமி, 1887 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார் முத்துக்கருப்பப் பிள்ளை, தாயார் அலமேலு அம்மையார் ஆவார். இவரது தந்தையார் முத்துக்கருப்பப் பிள்ளையின், நாகசுர இசையில் மகிழ்ந்த எட்வர்டு மன்னர், நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாக அளித்தார்.[சான்று தேவை]

கல்வியும், புலமையும்[தொகு]

  • தமது தந்தையாரிடம் நாதசுரப் பயிற்சியைப் பொன்னுசாமி பெற்றார். பிறகு மதுரை சௌந்தர பாண்டியன் நாதசுரக்காரரிடமும், கும்பகோணம் நாராயண நாயனக்காரரிடமும் பயிற்சி பெற்றார்.
  • எட்டயபுரம் இராமச்சந்திர பாகவதரிடம் பாட்டும் வீணையும் பயின்றார்.
  • 1895 ஆம் ஆண்டு முதல் கச்சேரி செய்யத் தொடங்கினார்.
  • மைசூர் அரண்மனையில், அவைக்களக் கலைஞராகவும் விளங்கினார்.
  • 1904 ஆம் ஆண்டில், தாம் வசித்த தெருவில் சங்கீத ரத்ன விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டினார்.
  • இந்நிலையில் தமிழ்ப் புலமையும், இசை வளமும் பெற்றவரானார்.
  • இவர் சிலப்பதிகாரத்தையும், அதன் உரையையும் நன்கு பயின்றார். இதன் விளைவாகப் பூர்வீக சங்கீத உண்மை என்ற இசைத் தமிழ் ஆய்வு நூலொன்றை வெளியிட்டார்.
  • பூர்வீக சங்கீத உண்மை என்ற நூலை இயற்றினார். மேளகர்த்தா இராகங்கள் 32 மட்டுமே என்பதனை உறுதிப்படுத்தியவர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "மதுரை பொன்னுசாமி பிள்ளை (பார்த்த நாள்:16 சூலை 2014)". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.