பெரியதம்பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெரிய தம்பிரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெரியதம்பிரான்

பெரியதம்பிரான் (Periyatambiran) ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் காணப்படும் ஒரு அரசர் ஆவார். [1][2][3] இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெரியதம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது. மட்டக்களப்பில் குடியேறிய 17 சிறைக்குடிகளுள் ஒன்றான வண்ணார் குல மக்களின் குலதெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.[4][5]

ஐதீகக் கதை[தொகு]

சிவபெருமானைப் புறக்கணித்து விட்டு தக்கன் யாகம் ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.[5]

வழிபாட்டுமுறை[தொகு]

பெரியதம்பிரான் வழிபாடு

வருடாந்த சடங்கு ஆடி மாத முழுமதி தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். இளநீர், கரும்பு, முக்கனி, கடலை, பொங்கல் என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.[5]

துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் பிள்ளையார், வைரவர், முருகன், வீரபத்திரர், திருமால், அம்மன்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா.நாகராஜ், தொகுப்பாசிரியர் (1983). மதுரை மாவட்ட வரலாற்று கருத்தரங்கு. வரலாற்றுப் பேரவை. பக். 77. https://books.google.co.in/books?id=2r0LAAAAIAAJ&q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&dq=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwiR09bJovbyAhXgyDgGHe9TDWwQ6AF6BAgDEAM. 
  2. ந.கடிகாசலம், தொகுப்பாசிரியர் (2001). அயலகத் தமிழ்க்கலை , இலக்கியம் , சமகாலச் செல்நெறிகள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக். 130. https://books.google.co.in/books?id=LKlkAAAAMAAJ&dq=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+. "மட்டக்களப்பில் திரௌபதி , காளி , மாரியம்மன் வழிபாடும் , வைரவர் , பெரியதம்பிரான் , வதனமார் , குமாரர் தெய்வ வழிபாடுகளும் உண்டு" 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-19. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
  4. க.மகேஸ்வரலிங்கம், தொகுப்பாசிரியர் (1996). மட்டக்களப்பு சிறுதெய்வ வழிபாடு ஓர் அறிமுகம். தில்லை வெளியீடு, மகிழடித்தீவு. பக். 73. https://books.google.co.in/books?id=QEoNAAAAIAAJ&q=வேறு+எவரும்+பூசை+செய்வதில்லை&dq=வேறு+எவரும்+பூசை+செய்வதில்லை&hl=en&sa=X&ved=2ahUKEwj8xYDjgNrwAhXx4jgGHentBg4Q6AEwAHoECAQQAw. "பெரியதம்பிரானுக்கு வண்ணார் தவிர வேறு எவரும் பூசை செய்வதில்லை" 
  5. 5.0 5.1 5.2 5.3 சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியதம்பிரான்&oldid=3691409" இலிருந்து மீள்விக்கப்பட்டது