வெப்ப வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைபடத்தில் வெப்பமண்டலப் பிரதேசமானது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ளது
ஒரு ஆண்டின் 12 மாதங்களுக்குமான சராசரி வெப்பநிலை 18 °C (64 °F) ஆகக் கொண்ட புவியின் வெப்பமண்டலப் பிரதேசங்கள்

வெப்ப வலயம் அல்லது அயன வலயம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது.

பருவகாலமும், காலநிலையும்[தொகு]

பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும்.[1] இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் மழைக்காலம், மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது மாரிகாலம் எனவும் உலர்காலமானது கோடைகாலம் எனவும் அழைக்கப்படும். மிதவெப்பமண்டலத்தில் போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை இலையுதிர்காலம் எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை இளவேனிற்காலம் எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை குளிர்காலம் என்றும் அழைப்பார்கள்.

தெர்மோ என்ற கிரேக்கச் சொல்லினை இந்த அடுக்கினைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள். பூமியிருந்து 80 கி.மீக்கு மேல் இருப்பதால் இங்கு வாயுக்களின் மூலக்கூறு நிறை குறைவாக இருக்கிறது. ஆக்சிஜன் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. மேலும் இங்கு சூர்ய கதிரியக்கம் உறிஞ்சப்படுகிறது. இதனால் இங்கு வெப்பநிலை 1500 டிகிரி வரை உயருகிறது. [2]

உசாத்துணை[தொகு]

  1. Costa Rica Guide (2005). When to Travel to Costa Rica. ToucanGuides. Retrieved on 2008-12-27.
  2. ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ மங்கை வெளியீடு பக்கம் 22


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_வலயம்&oldid=2916440" இலிருந்து மீள்விக்கப்பட்டது