திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்[1]
ISO 9001:2008 CERTIFIED


திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலைய முகப்பு

IATA: TRZICAO: VOTR
TRZ is located in தமிழ் நாடு
TRZ
TRZ
TRZ is located in இந்தியா
TRZ
TRZ
இந்திய வரைபடத்தில் திருச்சி வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் பொது வானூர்திப் போக்குவரத்து அமைச்சகம் (இந்திய அரசு)
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது திருச்சிராப்பள்ளி மற்றும் நடுத்தமிழக மாவட்டங்கள்
அமைவிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு,  இந்தியா
உயரம் AMSL 288 அடி / 88 மீ
ஆள்கூறுகள் 10°45′55″N 078°42′35″E / 10.76528°N 78.70972°E / 10.76528; 78.70972
இணையத்தளம் http://aai.aero
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
09/27 2,480 8,136 தார்
புள்ளிவிவரங்கள் (03/2018)
பயணிகள் போக்குவரத்து 15,13,273
வானூர்திப் போக்குவரத்து 12,801
சரக்குப் போக்குவரத்து 7,541டன்கள்
Source: AAI[2][3][4]

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது.[5] இங்கு முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற வானூர்தி நிறுவனங்கள் வானூர்தி சேவையை இயக்கத் தொடங்கின. பின் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற வானூர்தி நிறுவனங்கள், வானூர்தி சேவையைத் தொடங்கின. இதில் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி வானூர்தி நிலையம் தான் பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. திருச்சி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்து அமைச்சகத்தால் 4 அக்டோபர் 2010-ல் பன்னாட்டுத் தகுதி வழங்கப்பட்டது.[1]

இந்த வானூர்தி நிலையம் தினமும் கிட்டத்தட்ட 3,000 வெளிநாட்டுப் பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு ௭௭ விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக நாள்தோறும் திருச்சியிலிருந்து 600 பயணிகள் கோலாலம்பூருக்கும், 400 பயணிகள் சிங்கப்பூருக்கும் செல்கின்றனர்.[6]. இந்த வானூர்தி நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டுப் போக்குவரத்து வானூர்திகளை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த வானூர்தி நிலையம், நடுக்கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்ல உதவியாக மிகச் சிறந்த தொண்டாற்றி வருகிறது.

வரலாறு[தொகு]

இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பிரித்தானிய விமானப்படை உலகப் போரின் போது இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி்யது. போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டன. உலகப் போருக்குப் பின்னர் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1980களின் ஆரம்பகாலத்தில் தொடங்கப்பட்டது. இலங்கை ஏர்லைன்ஸ் வாரம் ஒரு முறை கொழும்புக்கு 1981 ம் ஆண்டு விமான சேவையைத் துவக்கியது; பின்னர் படிப்படியாக இப்போது தினசரி இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் 80 களில் சென்னைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

பிஆர் பிரவுஸ் (1942 இல் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்தவர்) இன் கூற்றுப்படி 1930 மற்றும் 40 களில் விமான நிலையம் ரேஸ் கோர்ஸாக பயன்படுத்தப்பட்டது. விமான நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு கோபுரமும் 600 மீட்டர் ஓடுபாதையும் தவிர எந்தவொரு கட்டிடமும் இல்லை. மேலும் அவர் கூறுகையில், திருச்சி விமான நிலையம் டாட்டாவின் டகோட்டா ரக விமானங்களைக் கையாண்டுள்ளது. இந்த விமானம் மும்பையிலிருந்நு பெங்களூரு வழியாகத் திருச்சி வந்து எரிபொருள் நிரப்பிய பிறகு பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்புக்குப் சென்றது.[7]. வழக்கமாக 5 முதல் 20 பேர் திருச்சியிலிருந்து இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

முனையங்கள்[தொகு]

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளன. புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.

பயணிகள் முனையம்[தொகு]

80 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கி ஜூன் 2009 1ல் இருந்து செயல்படத் தொடங்கியது.[8] இரண்டு மாடி முனையத்தில் மொத்த தரைப் பகுதி 11,777 சதுர மீட்டர் உள்ளது. முனையம் கொடுக்கப்பட்ட நேரத்தில் 400 பயணிகளைக் கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையத்தின் சில அம்சங்கள்:[9]

  • 12 சோதனை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்)
  • 4 சுங்கத்துறை நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (1 புறப்பாடு + 3 வருகை)
  • 16 புலம்பெயர்வு நுழைதாள் கூண்டுகள் (கவுண்டர்கள்) (8 புறப்பாடு + 8 வருகை)
  • 1 சுகாதார அலுவலர்
  • 3 சாதன வார்கள் (47 மீ ஒவ்வொன்றும்)
  • 5 எண்ணிக்கை பொதிகளுக்கான ஊடுகதிர் பரிசோதனை சாதனம் [10]
  • 210 மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்
  • பாதுகாப்பு சோதனை அலகுகள் = 2
  • மொத்தம் விமானம் நிற்க இடம் = 7
    • 3 குறியீடு டி விமானத்திற்கு
    • 4 குறியீடு சி விமானத்திற்கு

சரக்கு முனையம்[தொகு]

விமான நிலையத்தில் பழைய முனையம் ஒரு சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. 4000 சதுர மீட்டர் சரக்கு வளாகம் 21 நவம்பர் 2011 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.[11] தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கு சுலபமான வழியாகவும் நுழைவாயிலாகவும் இந்த விமான நிலையம் உள்ளது. அழியக் கூடிய மற்றும் கெடாத பொருட்கள், ஆடைகள், கைத்தறி, கணினி ஹார்டுவேர் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன, இதனால் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை உள்ளது. 6000 முதல் 7000 டன்கள் வரை சரக்குகள் ஏற்றுமதி செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது.[12] மேலும் இங்கு ஆபத்தான சரக்குகளை கையாள்வதற்கான தனி வளாகமும் அமைந்துள்ளது.

ஓடுபாதை[தொகு]

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் முதலில் குறுக்காக சந்திக்கும் இரண்டு ஓடுபாதைகள் இருந்தன. பின்னர் சிறிய ஓடுபாதையான 15/33 மூடப்பட்டு, தரையிறங்கும் விமானங்களை விமான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லும் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இங்கு பயன்பாட்டில் இருப்பது 2,480 மீட்டர் நீளமுள்ள 09/27 ஓடுபாதை ஆகும். மிகவும் நீளம் குறைவான இந்த ஓடுபாதையில் ஏர்பஸ் A320, 321, போயிங் 737 மற்றும் ATR ரக சிறிய விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். மேலும் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான வழிகாட்டி கருவி, இரவு நேரத்தில் தரையிறங்க ஓடுபாதை விளக்குகள் உட்பட அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.[13]

திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையத்தில் ஓடுபாதைகள்
ஓடுபாதை எண் நீளம் அகலம் பலம் (பிசிஎண்) ஐஎலெசு[14]
09/27 2,427 m (7,963 அடி) 45 m (148 அடி) 68/F/A/W/T NIL / CAT I
15/33 (Closed) 1,456 m (4,777 அடி) 45 m (148 அடி) 15/F/B/W/T NIL / NIL

விரிவாக்கம்[தொகு]

தொடர்ந்து அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினால், திருச்சிராப்பள்ளி விமான நிலையமானது கடந்த 2004ஆம் ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பழைய ஓடுபாதை 6,000 அடியிலிருந்து (1,829 மீட்டர்) 8,136 அடியாக (2,480 மீட்டர்) நீட்டிக்கப்பட்டது; விமான நிறுத்துமிடங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டன; தரையிறங்கிய விமானம் நேராக நிறுத்துமிடத்திற்குச் செல்வதற்கான "டாக்சிவே" பாதை மற்றும் புதிய முனையம் ஒன்றும் கட்டப்பட்டது.

விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, தற்போதுள்ள சிறிய ஓடுபாதையை 12,500 அடியாக (3,810 மீட்டர்) உயர்த்தவும், அதி நவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கவும், தற்போதுள்ள பயணிகள் முனையத்தை 17,920 சதுர மீட்டராக (192,900 சதுர அடி) விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் 1,075 பயணிகளைக் கையாளவும், வேறு சில கட்டடங்கள் கட்டவும் இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது.[15] இதற்காக விமான நிலையத்தின் அருகேயுள்ள விவசாய நிலங்கள் மற்றும் இந்திய ராணுவத்துக்கும் சொந்தமான நிலங்கள் ஆகியனவற்றை கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.[16]

தர உயர்வு[தொகு]

திருச்சி விமான நிலையம் மூன்றாம் தர நிலையில் இரண்டாம் தர நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டில் திருச்சி விமான நிலையத்தின் மூலம் 8,895 சர்வதேச விமான சேவைகளும், 5,519 உள்நாட்டு விமான சேவைகளும், 69 பிற காரணங்களுக்கான விமான சேவைகளும் என மொத்தம் 14,483 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இவ்விமான சேவைகளின் வழியாக 13 லட்சத்து 14 ஆயிரத்து 839 சர்வதேச பயணிகளும், 2 லட்சத்து 97 ஆயிரத்து 020 உள்நாட்டு பயணிகள் என 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2019-20 ஆண்டில் இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.[17]

வானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேருமிடங்கள்
இன்டிகோ ஐதராபாத்து, மும்பை, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபு தாபி, மஸ்கட், சார்ஜா, துபாய், சிங்கப்பூர், பெங்களூர், குவைத், தோகா
ஏர்ஏசியா கோலாலம்பூர்
மலின்டோ ஏர் கோலாலம்பூர்
சிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு
ஸ்கூட் ஏர் சிங்கப்பூர்
வியட்ஜெட் ஏர் ஹோ சி மின்

பராமரிப்பு வசதிகள்[தொகு]

வானுர்தி பராமரிப்பு வசதியான[18] ஏர்பஸ் ஏ320 வகை விமானங்களில் போக்குவரத்து சோதனைகளை மேற்கொள்ள தேவையான பராமரிப்பு வசதிகளை இந்த நிலையம் கொண்டுள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஸ்கூட்டின் சார்பில் விமானப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.[19]

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இதன் விமானங்களைச் சேவை செய்வதற்கும் பழுதுபார்ப்பதற்கும் ஒரு பொறியியல் வளாகத்தைக் கொண்டுள்ளது. இது விரைவாக திரும்ப உதவும். இங்கு மராமத்து பணிகள் மேற்கொள்ளலாம். தொடக்கத்தில் நான்கு உரிமம் பெற்ற பொறியாளர்கள் மற்றும் எட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் சேவை மற்றும் பழுதுபார்க்கும் தேவைகளைப் பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்டனர். இங்கு போதுமான உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களும் உள்ளன.[20]

விமான நிலையத்திற்கு பெயரிடுதல்[தொகு]

2012ஆம் ஆண்டில், நகரத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற சர் ச. வெ. இராமனின் பெயரை விமான நிலையத்திற்கு சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.[21] இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மறைவுக்குப் பிறகு, இந்த விமான நிலையத்திற்கு "முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பன்னாட்டு விமான நிலையம்" என்று பெயர் மாற்றம் செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.[22]

2019 ஆம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா புஷ்பா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விபத்துகள்[தொகு]

  • திசம்பர் 21, 1949 அன்று கொழும்பு ரத்தன்மாலாவிலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு ஏர் சிலோன் வானூர்தி "சுனேத்ரா தேவி" என்ற டக்ளஸ் DC-3 டகோட்டா விமானத்தால் இயக்கப்பட்டு VP-CAT ஆக பதிவுசெய்யப்பட்ட வானூர்தி திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்கு உள்ளாகியது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்தி ஏற்பட்டுள்ளது. இதனை, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட பின்னரே விமானி கவனித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. ஆனால் 21 பயணிகளில் ஒருவரும் மூன்று பணியாளர்களும் காயம் அடைந்தனர். விமானம் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தது.[23][24]
  • திசம்பர் 25, 1965 அன்று, VT-DUC ஆக பதிவுசெய்யப்பட்ட திட்டமிடப்படாத டக்ளஸ் DC-3 விமானம் விமானியின் தவறு காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானம் கணிசமான சேதம் அடைந்ததுடன் ஒரு பயணி மற்றும் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர்.[25]
  • மே 29, 1980 அன்று, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC529, VT-EGD என பதிவுசெய்யப்பட்ட போயிங் 737-200 விமானம், 122 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்னை-திருச்சிராப்பள்ளி பாதையில் இயக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் போது விமானியால் விமானத்தை சரியாக சீரகா இயக்க முடியவில்லை. எனவே வட்டமடித்து சென்னை திரும்பியது. இச்செயலின் போது விமானம் ஓடுபாதையுடன் உரசியது. சென்னை திரும்பிய விமானம், பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கணிசமான சேதம் ஏற்பட்டது.[26]
  • இதன் பின்னர், 11 அக்டோபர் 2018 அன்று, VT-AYD ஆகப் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737-800 ஆல் துபாய்க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX611, 1:18 AM மணிக்கு புறப்படும்போது வானூர்தி நிலை சுற்றுச்சுவர் மற்றும் உணர்கொம்பில் மோதியதால் பாதிக்கப்பட்டது. வானூர்தியின் வால் பகுதியின் சேதத்தினை அவதானித்த அதிகாரிகள், வானூர்தி மத்திய கிழக்கு நாடுகளை நெருங்கியபோது, ​​விமாத்தினை மும்பைக்கு பறக்க உத்தரவிட்டனர். விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறங்கியது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தரையிறங்கும் பற்சக்கரமத்தில் தேங்கியிருந்த குப்பைகளால் சிறிய சேதங்கள் ஏற்பட்டது.[27][28][29]
  • அக்டோபர் 22, 2022 அதிகாலையில் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த சுமையுந்து வானூர்தி நிலைய எல்லைச் சுவரில் மோதி சேதத்தினை ஏற்படுத்தியது. இச்சேதம் உடனடியாக சரிசெய்யப்பட்டது.[30]

புகைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=88173
  2. "Traffic Statistics-2016" (PDF). AAI. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Aircraft Movements-2016" (PDF). AAI. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Cargo Statistics-2016" (PDF). AAI. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Trichy becomes India's fastest growing international airport". The Economic Times. 05 April 2014. பார்க்கப்பட்ட நாள் 06 August 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. airport/articleshow/28302718.cms "Malindo Air lands at Trichy airport". The Times of India. 03 January 2014. பார்க்கப்பட்ட நாள் 06 August 2014. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= and |date= (help)
  7. http://www.flightglobal.com/pdfarchive/view/1935/1935%20-2-%200406.html
  8. "Trichy Airport new terminal inauguration". The Hindu. 18 February 2009 இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110917102020/http://www.hindu.com/2009/02/18/stories/2009021857220100.htm. பார்த்த நாள்: 13 January 2011. 
  9. "Trichy Airport new terminal". Equity Bulls. 22 February 2009 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090228112841/http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=46165. பார்த்த நாள்: 5 January 2011. 
  10. http://www.aai.aero/allAirports/Trichy_pi.jsp
  11. Cargo complex commissioned
  12. [1]
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
  14. "eAIP" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
  15. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=103469
  16. "Committee formed for runway expansion at Trichy airport - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 22 January 2012. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  17. [2]திருச்சி விமான நிலையம் மூன்றாம் தர நிலையில் இரண்டாம் தர நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது
  18. airworks.in(4 January 2011). "Air Works India Engineering Pvt. Ltd. Inaugurates its Line Maintenance facility at Trichy International Airport". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2022-10-23.
  19. "Line maintenance services for the aircraft". 25 April 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/Line-maintenance-services-for-aircraft/article16622794.ece. 
  20. S.Ganesan (16 December 2010). "Air India maintenance". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Air-India-Express-opens-engineering-complex/article15594997.ece. 
  21. "'Name airport after C.V. Raman' - TAMIL NADU". The Hindu. 19 November 2012. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  22. "Kalam nostalgia spurs book sales, biopic, online pleas". The Times Of India. 1 August 2015. https://timesofindia.indiatimes.com/india/Kalam-nostalgia-spurs-book-sales-biopic-online-pleas/articleshow/48302685.cms. 
  23. "ASN Aircraft accident Douglas C-47A-1-DK (DC-3) VP-CAT Tiruchirappalli-Civil Airport (TRZ)".
  24. Roger Thiedeman (19 December 1999). "Air Ceylon Dakota "Sunethra Devi"". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
  25. "ASN Aircraft accident Douglas DC-3 VT-DUC Tiruchirappalli-Civil Airport (TRZ)".
  26. "ASN Aircraft accident Boeing 737-2A8 Advanced VT-EGD Tiruchirappalli-Civil Airport (TRZ)".
  27. "ASN Aircraft accident Boeing 737-8HG (WL) VT-AYD Tiruchirappalli-Civil Airport (TRZ)".
  28. "Damaged Air India Plane Flew For 3 Hours, Clueless Pilot Asked To Divert". NDTV.com. https://www.ndtv.com/india-news/air-india-flight-with-136-on-board-hit-wall-at-trichy-airport-yesterday-diverted-to-mumbai-1930799. 
  29. "Air India Express plane hits Trichy airport compound wall, lands safely in Mumbai". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/trichy/air-india-express-plane-hits-trichy-airport-compound-wall-lands-safely-in-mumbai/articleshow/66173131.cms. 
  30. "சுற்றுச்சுவரை நொறுக்கி உள்ளே புகுந்த லாரி" (in தமிழ்). தினமலர் (தஞ்சாவூர்) 72 (48): p. 2. 23 10 23.10.2022. 23.10.2022. 

வெளியிணைப்புக்கள்[தொகு]